காலையே வீட்டு வாசலில் நின்ற ED... ஆடிப்போன ஆதவ் அர்ஜுனா..!! பரபரப்பான சென்னை..
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி அவருடைய வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாகத் துறையினர் சோதனை மேற்கொள்கிறார்கள்.
ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர். முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டில் இரண்டு முறை வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆதவ் அர்ஜுனா, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன்.
கோவை துடியலூரில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான அலுவலகம், வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. காலையிலேயே அவரது வீட்டுக்கு வந்த அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சோதனை நடத்தி வருகிறார்கள். இவருடைய வீட்டில் சோதனை நடைபெறும் நிலையில் அதன் எதிரொலியாக அவருடைய மருமகனான ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Read more ; 2026 தேர்தல் தோல்வி பயத்தில் அனைத்து மகளிருக்கும் ரூ.1000 வழங்கும் திமுக..!