ரூ.92,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..!! 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!!
Border Roads Organisation ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் பெயர் : Draughtsman, Supervisor (Administration), Turner, Machinist மற்றும் பல்வேறு பணிகள்
காலிப்பணியிடங்கள் : 466
கல்வி தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு / டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18ஆகவும், அதிகபட்ச வயது 27ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
தகுதியானவர்களுக்கு Level 2 முதல் 5 வரையிலான (ரூ.19,900 முதல் ரூ.92,300) ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத் தேர்வு / Physical Efficiency Test (PET) / Practical Test (Trade Test) மற்றும் Primary Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.12.2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.