For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆவினில் வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.43,000 சம்பளம்..!! விண்ணப்பிக்க விரும்பினால் இதை பண்ணுங்க..!!

08:28 AM Dec 16, 2023 IST | 1newsnationuser6
ஆவினில் வேலைவாய்ப்பு     மாதம் ரூ 43 000 சம்பளம்     விண்ணப்பிக்க விரும்பினால் இதை பண்ணுங்க
Advertisement

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது 1967 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியம் மதுரை மாவட்டத்தில் 713 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் மூலம் 2,39,000 லிட்டர் அளவில் நாளொன்றிற்கு பால் கொள்முதல் செய்து வருகிறது. இதில் சுமார் 17, 910 சங்க உறுப்பினர்கள் பால் உற்பத்தி செய்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், இந்த ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் (Veterinary Consultant) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி : கால்நடை மருத்துவ படிப்பு, B.V.SC & A.H with Computer Knowledge

கூடுதல் நிபந்தனைகள் : கண்டிப்பாக இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 43,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், விண்ணப்பதாரர்கள் ஜனவரி மாதம் 10ஆம் தேதி காலை 9.30 மணியளவில் படிப்பு (B.V.SC & A.H ), ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

நேரடி தேர்வு நடைபெறும் இடம் : மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய நிறுவனம், மதுரை - 626 020, மின்னஞ்சல் முகவரி: aavinmadurai1@gmail.com, தொலைபேசி எண். 0452 - 2529561 ஆகும்.

Tags :
Advertisement