முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழ்நாட்டில் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு..!! சென்னை வந்தடைந்தார் முதல்வர் முக.ஸ்டாலின்..!!

Chief Minister Mukherjee Stalin, who went to America to attract investments, returned to Chennai today.
09:36 AM Sep 14, 2024 IST | Chella
Advertisement

முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.

Advertisement

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈா்க்கும் வகையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களுக்கு முதல்வா் முக.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த பயணத்தில் இதுவரை 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,618 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயா் அலுவலா்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான், முதலீடுகளை ஈா்ப்பதற்கான 17 நாள் அரசு முறை அமெரிக்கா பயணங்களை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த முதல்வருக்கு அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Read More : பெண்களுக்கு செம குட் நியூஸ்..!! உரிமைத்தொகை குறித்து வெளியாகும் சூப்பர் அறிவிப்பு..!!

Tags :
அமெரிக்காதமிழ்நாடுமுதல்வர் முக.ஸ்டாலின்வேலைவாய்ப்பு
Advertisement
Next Article