வந்தது புதிய உத்தரவு.! பிஎஃப் பணத்திற்கு வாரியம் வைத்து புது செக்.! ஊழியர்கள் அதிர்ச்சி.!
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி என்ற சேமிப்பு இருக்கிறது. இந்த வருங்கால வைப்பு நிதியில் அவர்களது மாத சம்பளத்தின் ஒரு பகுதி சேமித்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களது ஓய்வுக்கான வாழ்க்கைக்கு உத்தரவாதமாக இந்த தொகை அமைகிறது.
இந்த பிஎஃப் தொகை மேலாண்மை வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு வருங்கால வைப்பு நிதி ஆணையம் பிஎஃப் முன் பணத்தை எடுத்துக் கொள்ள தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கியிருந்தது.
இதன் மூலம் 2.20 கோடி சந்தாதாரர்கள் தங்களது பிஎஃப் முன்பணத்தை வங்கியில் இருந்து எடுத்து இருக்கின்றனர். மேலும் சந்தாதாரர்கள் தங்களது வைப்பு நிதி தொகையை எடுத்து அவசர தேவைகளுக்கு பயன்படுத்தாமல் செலவு செய்து வருவதாக வாரியம் கண்டறிந்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி முன்பணத்தை எடுப்பதற்கு தடை விதித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் பிஎஃப் சேமிப்பின் முன்பணத்தை எடுக்க முடியாது. இதனால் தொழிலாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.