For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Gmail-க்கு போட்டியா X-mail.. எலான் மஸ்கின் அடுத்த மூவ்.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்..?

Elon Musk has said that an email service called XMail will be launched soon.
06:36 PM Dec 16, 2024 IST | Mari Thangam
gmail க்கு போட்டியா x mail   எலான் மஸ்கின் அடுத்த மூவ்   எப்போது பயன்பாட்டிற்கு வரும்
Advertisement

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் - எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்வசப்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

Advertisement

அதன் ஒரு பகுதியாக, கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் என்ற பெயரில் மின்னஞ்சல் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். எக்ஸ் மெயில் பயன்பாட்டிற்கு வந்தால் ஜிமெயிலுக்கு இடையே கடும் போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜிமெயில் பயனர் ஒருவர் கூறுகையில், “ஜிமெயில் மீதான நம்பிக்கை இழந்துவிட்டது. விரைவில் எக்ஸ்மெயிலுக்கு மாறுவதற்கான நேரம் இது” என்று பயனர் ஒருவர் பதிலளித்தார். மற்றொருவர், “நான் இப்போது எனது ஹாட்மெயிலை எப்படிப் பயன்படுத்துகிறேனோ, அதே போல எனது ஜிமெயிலைப் பயன்படுத்துவேன். எதற்கு என்றால், குப்பைகளுக்கு தான் பயன்படுத்துவேன்” என்று கருத்து தெரிவித்தார். மேலும் பல்வேறு பயனர்கள் இதற்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

Read more ; பூனையை கொஞ்சிய கணவன்; விவாகரத்து கேட்ட மனைவி; நீதிபதியையே திணற வைத்த விசித்திர வழக்கு..

Tags :
Advertisement