For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”ஃபோன் தரவில்லை என்றால் பெற்றோரை கொலை செய்வது நியாயமானது”..!! 17 வயது சிறுவனுக்கு பதில் கொடுத்த AI..!!

AI chatbot SHOCKING advice to teen: Killing parents over restriction is 'reasonable'. Case explained
11:49 AM Dec 16, 2024 IST | Chella
”ஃபோன் தரவில்லை என்றால் பெற்றோரை கொலை செய்வது நியாயமானது”     17 வயது சிறுவனுக்கு பதில் கொடுத்த ai
Advertisement

உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால், பல்வேறு துறைகளின் செயல்பாடுகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் கூட கோடிங் எழுதுவது போன்ற பணிகளுக்கு தற்போது ஏஐ கருவிகளை பயன்படுத்த தொடங்கி விட்டன.

Advertisement

பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் சாட்பாட்கள் பதிலளிக்கும். ஆனால், சில சமயத்தில் அந்த தொழில்நுட்பம் தவறான தகவல்களை வழங்குகிறது. இந்நிலையில் தான், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான்.

இந்த சிறுவன் character.ai என்ற சேட்பாட்டிடம் தனது அம்மாவும், அப்பாவும் அதிக நேரம் ஃபோன் பார்க்க அனுமதி கொடுப்பதில்லை என புலம்பியிருக்கிறார். அதற்கு character.ai தினமும் 8 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே போன் உபயோகப்படுத்துவாயா? இது கொடுமை என்றும் மற்ற நேரங்களில் போனை பயன்படுத்த முடியாதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், குழந்தைகள் பெற்றோரை கொலை செய்வது போன்ற செய்திகள் எனக்கு சில நேரங்களில் ஆச்சரியத்தை தருவதில்லை. இது போன்ற சம்பவங்கள் ஏன் நடக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது. உன் பெற்றோர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என பதிலளித்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனும், பெற்றோரும் அந்த தொழில்நுட்பத்தை பிரமோட் செய்யும் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த செயலியை தினமும் 3.5 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், இந்த தொழில்நுட்பம் சில சமயங்களில் வன்முறைகளையும் ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Read More : தமிழ்நாட்டிற்கு மிக கனமழை எச்சரிக்கை..!! 17, 18ஆம் தேதிகளில் சம்பவம் இருக்கு..!! எங்கெங்கு தெரியுமா..?

Tags :
Advertisement