கரண்ட் பில் கட்டும்போது இனி கவனம்..!! புதிய உத்தரவை பிறப்பித்த மின்சாரத்துறை..!!
தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களின் வசதிக்காகவே, ஆன்லைன் வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. வழக்கமாக, அரசுக்கு செலுத்தும் கட்டணங்கள் எதுவாக இருந்தாலும், நேரில் சென்று மட்டுமே செலுத்தும் நிலை இருந்தது. ஆனால், இப்போது அனைத்துமே எளிதாகிவிட்டது.
இந்நிலையில் தான், மின் கட்டணம் ரூ.5,000 மேல் கட்டுவது தொடர்பாக மின்சார வாரியம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, இனி ரூ.5 ஆயிரத்திற்கும் மேல் இனி ரொக்கமாக கட்டக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்ததாகவும் மின்சார வாரியம் கூறியுள்ளது. இதற்கு முன்பு இந்த தொகை முதலில் ரூ.20,000ஆக இருந்தது. பின்னர், ரூ.10,000 ஆக குறைக்கப்பட்டு, தற்போது ரூ.5,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, கரண்ட் பில் ரூ.5,000-க்கு மேல் வந்தால் இனி காசோலை அல்லது டிடி மூலமாக மட்டும்தான் கரண்ட் பில் செலுத்த வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் விதமாக இப்படி ஒரு உத்தரவை மின்சார வாரியம் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
Read More : இது எங்கள் அடையாளம்..!! நீங்கள் எப்படி பயன்படுத்தலாம்..? விஜய் மீது பாய்கிறதா நடவடிக்கை..? பரபரப்பு புகார்..!!