"தேர்தல் பத்திரம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் செயல்முறை"... உச்ச நீதிமன்றம் மேற்கோள் காட்டிய முக்கிய புள்ளிகள்.!
அரசியல் கட்சிகளுக்கு பெயர் குறிப்பிடாத வகையில் நன்கொடைகள் வழங்கும் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை சட்டபூர்வமாக்குவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்து இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது. இவர்கள் தங்களது தீர்ப்பில் தேர்தல் பத்திர திட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளது. மேலும் அரசியல் சாசன பிரிவின் 19(1)(a) இன் கீழ் தகவல் அறியும் உரிமையை மீறுவதாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
தேர்தல் பத்திரத் திட்டத்தை பயன்படுத்தி கருப்பு பணம் வெள்ளை ஆக்கப்படுவதாக நீதிமன்றம் குற்றம் சாட்டியிருக்கிறது. மேலும் தேர்தல் பத்திரம் திட்டம் ஏன் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என்பதற்கு சில முக்கிய புள்ளிகளையும் உச்ச நீதிமன்றம் மேற்கோள் காட்டி இருக்கிறது. இந்த கருத்துக்களின் அடிப்படையில் தேர்தல் பத்திரத் திட்டம் தகவல் அறியும் உரிமை மற்றும் பேச்சுரிமைக்கு எதிரானது எனக் கூறி இதனை தடை செய்துள்ளனர்.
தேர்தல் பத்திரத் திட்டம் வெளிப்படையானது அல்ல என்று கூறிய உச்ச நீதிமன்றம், கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் செயலாக மாறிவிட்டது என குற்றம் சாட்டியது.
தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இரண்டு தனி தனியான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன ஆனால் அவை ஒருமித்த கருத்துக்களுடன் இருக்கின்றன என தெரிவித்தார். இந்த வழக்கில் தலைமை நீதிபதி ஒரு தீர்ப்பையும் மற்றொரு நீதிபதியான சஞ்சீவ் கண்ணா ஒரு தீர்ப்பையும் வழங்கி உள்ளனர். ஆனால் இந்த இரண்டு தீர்ப்புகளும் ஒருமித்த கருத்துடையவையாக இருக்கின்றன.
அரசியல் கட்சிகள் தேர்தல் செயல்பாட்டில் முக்கியமான அங்கம் எனக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம் கட்சிகளுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பான தகவல்கள் வாக்களிக்கும் மக்கள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளது.
தங்கள் அடையாளங்களை மறைத்து அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் தேர்தல் பத்திரத் திட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(a) பிரிவின் கீழ் தகவல் அறியும் உரிமையை மீறுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தகவல் அறியும் உரிமை மீறல் நியாயமானது அல்ல என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
19(1) பிரிவின் கீழ் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் அரசியல் நிதியுதவி பற்றி தெரிந்து கொள்ளும் உரிமை உள்ளதற்கான காரணங்களையும் முடிவுகளையும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது.
இந்த நீதிமன்றம் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் பற்றிய தகவல் அறியும் உரிமையை அங்கீகரித்துள்ளது. மேலும் இது மாநில விவகாரங்களுக்கு மட்டும் பொருந்துவதோடு அல்லாமல் ஜனநாயகக் கொள்கைகளின் பங்கேற்ப இருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது .
நாட்டின் அரசியல் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பவை அரசியல் கட்சிகள். எனவே வாக்காளர்கள் தங்களுக்கு சரியான அரசியல் கட்சியை தேர்வு செய்து வாக்களிப்பதற்கு அரசியல் நிதி பற்றிய தகவல்கள் அவசியம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொருளாதார சமத்துவமின்மை மாறுபட்ட அளவிலான அரசியல் ஈடுபாடுகளுக்கு வழிவகுக்கிறது. மேலும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கே தகவல்களை எளிதில் அனுப்பும் வசதி இருப்பதால் தங்களுக்கு தேவையான வகையில் கொள்கையை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது
குறைந்த பட்ச கட்டுப்பாட்டு வழிமுறைகள் சோதனை திருப்தி அளிக்காது என்று நாங்கள் கருதுகிறோம். இந்த நோக்கங்களை அடைவதற்கு தேர்தல் பத்திரங்களைத் தவிர பிற வழிகளும் உள்ளன என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது .
மின்னணு பரிமாற்றம் மற்றும் தேர்தல் அறக்கட்டளைகளின் மூலம் பங்களிப்பு செய்வது பிற வழிகள் என்றால் கருப்புப் பணத்தைத் தடுப்பது தேர்தல் பத்திரங்களுக்கான அடிப்படை அல்ல.
தனியுரிமைக்கான அடிப்படை உரிமை என்பது ஒரு குடிமகனின் அரசியல் தனியுரிமை மற்றும் அரசியல் இணைப்புக்கான உரிமையை உள்ளடக்கியது.ஒரு குடிமகனின் அரசியல் தொடர்பு பற்றிய தகவல்கள் ஒரு குடிமகனைத் தடைகளுக்கு உட்படுத்துவதற்கு அல்லது அவர்களை பரிகாசத்திற்கு உட்படுத்துவதற்கு வழிவகுக்கும்.வாக்காளர் கண்காணிப்பு மூலம் வாக்காளர்களின் வாக்குரிமையை ரத்து செய்ய இதைப் பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
RPA இன் பிரிவு 29(1)(c) திருத்தம் மற்றும் வருமான வரித்துறை சட்டம் திருத்தம் அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவிக்கப்பட்டுள்ளது.