Election | ’தேர்தல் தீர்ப்பே மாறுதே’..!! ’அப்படினா அதெல்லாம் பொய்யா கோபால்’..!! ஏபிபி வெளியிட்ட சர்வே முடிவு..!!
தமிழ்நாட்டில் திமுக அதிமுகதான் இப்பவும் கிங். பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்க எல்லாம் வாய்ப்பே இல்லை என்று ஏபிபி - சிவோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தல்களுக்கான ஏபிபி சிவோட்டர் கருத்துக் கணிப்புத் தரவுகளின்படி, திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 39 மக்களவைத் தொகுதிகளையும் தமிழ்நாட்டில் கைப்பற்றி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ (எம்), விசிக, ம.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு தேச மக்கள் கட்சி ஆகியவற்றுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை திமுக அமைத்துள்ளது. இந்த கூட்டணி 39 தொகுதிகளையும் மொத்தமாக கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு பெற்றதை விட திமுக கூட்டணி 1 இடம் கூடுதலாக பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்புத் தரவுகள், வாக்குப் பங்கின் அடிப்படையில், 54.7% சதவீதத்துடன், திமுக மீண்டும் தமிழ்நாட்டில் முதலிடம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக, அதிமுக 27.8% வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது இடம் 10.9% வாக்குகளுடன் NDA க்கு லாபமாக இருக்கும், மற்ற கட்சிகள் 6.8% வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பாஜக வாக்கு சதவிகித அடிப்படையில் 2ஆம் இடம் பிடிக்கும் என்று பல கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், இந்த கணிப்பில் அதிமுகதான் 2ஆம் இடம் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜக 11 சதவிகிதம் கூட வாக்கு சதவிகிதம் எடுக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களுக்கான ஏபிபி சிவோட்டர் கருத்துக் கணிப்புத் தரவுகளின்படி, திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 39 மக்களவைத் தொகுதிகளையும் தமிழ்நாட்டில் கைப்பற்றி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரும் மக்களவைத் தேர்தலில் குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் பாஜக தனது ஆதிக்கத்தைத் தொடர உள்ளது. அதன்படி, அனைத்து 25 இடங்களையும் கைப்பற்றவுள்ளது.
அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான UPA அங்கே ஒரு இடம் கூட பெறாமல் தோல்வி அடையும் என்று கணிப்பில் கூறப்பட்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. CVoters உடன் இணைந்து ABP News நடத்திய கருத்துக்கணிப்பில் ஜம்மு காஷ்மீரில் கடுமையான போட்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 5இல் இந்தியா கூட்டணிக்கு 3 லோக்சபா இடங்களும் பாஜகவுக்கு இரண்டு லோக்சபா தொகுதிகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Read More : Tasmac | ’இனி ஒரு நபருக்கு 4 குவாட்டருக்கு மேல் தரக்கூடாது’..!! டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு..!!