For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு..!

01:32 PM Apr 25, 2024 IST | Kathir
பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
Advertisement

தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் ஏப்ரல் 29ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரிவினை ஏற்படுத்தும் விதத்தில் பேசியதாக மோடி மீது காங்கிரசும், ராகு காந்தி மீது பாஜகவும் புகார் அளித்திருந்த நிலையில் தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Advertisement

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களை உள்ளடக்கிய 89 தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் தலைவர்களின் தீவிர பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக பிரதமர் மோடி குஜராத்தில் காங்கிரஸுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். இது எதிர்க்கட்சிகள் இடையே பெரும் அப்பரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மோடியா பேச்சு பூரித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது. அதே போல் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது பாஜகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. காங்கிரஸ் மீது பாஜகவும், பாஜக மீதும் காங்கிரசும் புகார் அளித்திருந்தது.

இந்த புகார் மனுக்கள் மீது பரிசீலித்து வருவதாக தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு மு ன் தெரிவித்திருந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருக்கக்கூடிய மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் ஏப்ரல் 29ஆம் தேதி காலை 11 மணிக்குள், வகைகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முக்கியத்தலைவர்களின் பேச்சு மக்களிடையே கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், மேலும் தர்தல் விதிகளை மீறி இப்படி விமர்சனங்களை முன்வைத்திருப்பதால் இதற்கு உரிய விளக்கம் அளிக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement