Election 2024 | "பாஜக சொல்வதை தேர்தல் ஆணையம் செய்கிறது…" மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு.!!
Electiuon: இந்தியாவின் 18 வது பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் பாண்டிச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப்பதிவுகள் அமைதியாக முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 26 ஆம் தேதி கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற இருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில் தேர்தல் குறித்து பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அரசு இயந்திரங்கள் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என குற்றம் சாட்டி இருக்கிறார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மத்தியில் ஆளும் அரசு காபந்து அரசாக இருந்தாலும் தேர்தல் ஆணையம் உட்பட அனைத்து அரசு இயந்திரங்களும் பாஜகவிற்கு சார்பாக செயல்படுகிறது என குற்றம் சாட்டியிருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலிலும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என தெரிவித்த அவர் மோடி அரசிற்கு சாதகமாகவே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என குற்றம் சாட்டியிருக்கிறார்.
எது எப்படி இருந்தாலும் தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில்(Election) பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்து துடைத்து எறியப்படும் என தெரிவித்திருக்கிறார். மக்கள் விரோத அரசிற்கு இந்தத் தேர்தலில் பொதுமக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என ஆவேசத்துடன் கூறியிருக்கிறார் மம்தா பானர்ஜி.