முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Lok Sabha 2024 | செல்போன் கொண்டு செல்ல தடை.!! தேர்தல் ஆணையம் விதித்த புதிய கட்டுப்பாடு.!!

09:17 PM Mar 26, 2024 IST | Mohisha
Advertisement

Lok Sabha | 2024 ஆம் வருட பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்வதற்கு தேர்தல் ஆணையம்(Election Commission) தடை விதித்துள்ளது.

Advertisement

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல்(Lok Sabha) தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பொதுத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது பல்வேறு கட்டுப்பாடுகளையும் தேர்தல் ஆணையம்(Election Commission) விதித்திருக்கிறது. பொதுத் தேர்தலை நியாயமான முறையில் நடத்த பல்வேறு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

மத்தியில் நடைபெறும் பாரதிய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவிக்கால முடிவடைவதை தொடர்ந்து 18-வது பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக இந்தியாவில் நடைபெற இருக்கிறது. ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முடிவடைய உள்ளது. ஜூன் மாதம் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பொதுத்தேர்தலை பாரபட்சமின்றி நியாயமான முறையில் நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்திருக்கிறது. தேர்தலின் போது வாக்காளர்கள் பணம் கொடுப்பதை தடுப்பதற்கும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழக தேர்தல் ஆணையர் புதிய விதிமுறை ஒன்றை இன்று வெளியிட்டு இருக்கிறார். அதன்படி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என தமிழக தலைமை அதிகாரி சத்திய பிரபா சாகு தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவை நியாயமான முறையில் நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்த அவர் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Read More: Lok Sabha 2024 | “பாஜக-விற்கு அதிமுக போட்ட பிச்சை தான் 4 எம்எல்ஏக்கள்”… சிவி சண்முகம் கடும் தாக்கு.!!

Tags :
ELECTION 2023election commissionLok Sabha 2024new restrictionSathya Prabha Sagu
Advertisement
Next Article