For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வேலூர் மக்களே ரெடியா.. பிரபல நிறுவனத்தில் வேலை..!! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

Edureka company operating in Vellore has released a new job notification.
02:03 PM Sep 13, 2024 IST | Mari Thangam
வேலூர் மக்களே ரெடியா   பிரபல நிறுவனத்தில் வேலை     ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
Advertisement

வேலூரியில் செயல்பட்டு வரும் Edureka நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. Edureka.. என்பது ஐடி துறை சார்ந்த பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தான் வேலூரில் செயல்பட்டு வரும் Edureka-வில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisement

பணியிடங்கள் : வேலூரில் செயல்பட்டு வரும் Edureka-வில் தற்போது வெப் டெவலப்பர் (Web Developer) மற்றும் டேட்டா சயின்ஸ் (Data Science) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி : இந்த பணிக்கு பிசிஏ, எம்சிஏ, பிஇ (கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி), பிஎஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்), எம்எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

என்னென்ன தகுதி : விண்ணப்பம் செய்வோருக்கு ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட், எஸ்க்யூஎல், பைத்தான் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். மேலும் நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். அதாவது ஆங்கிலத்திலும், தமிழிலும் பேச தெரிந்திருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பம் பற்றி வேகமாக கற்று கொள்ளும் திறமை இருப்பதோடு, மற்றவர்களுக்கு பயிற்சி வழங்குவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

சம்பளம் : பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.12 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பவளம் என்பது வழங்கப்படும். மேலும் உடல்நலம் சரியில்லாத பட்சத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் வழங்கப்படும். அதுமட்டுமின்றி பெர்ஃபமன்ஸை பொறுத்து போனசும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடி துறையில் பணியாற்றியவர்கள் அல்லது கம்ப்யூட்டர் ப்ரோகிராம் தொடர்பாக பயிற்சி வழங்கி இருந்தால் விண்ணப்பத்தாரர்களுக்கு அது பிளஸ் பாயிண்ட்டாகும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Edureka-வின் லிங்க்ட்இன் பக்கத்தின் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.

Read more ; இசையிலும் அசத்தும் AI தொழில்நுட்பம்..!! பாட்டு பாடி, நடனமாடும் பாப் இசைக்கலைஞர்..!!

Tags :
Advertisement