மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை...! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்...!
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகளிடமிருந்து கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகள் 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.வ, மி.பி.வ மற்றும் சீ.ம வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணாக்கர் ஒருவருக்கு கல்வி உதவித்தொகையாக கற்ப்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணம் ஆகிய கட்டணங்களுக்காக மாணாக்கரால் செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 இலட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2024 -25 ம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் (Fresh and Renewal Applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணாக்கர்கள், கீழ்கண்ட முகவரியிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை 5 அல்லது மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்ககம், சேப்பாக்கம், சென்னை 5 அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship schemes என்ற இணையதள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டிசம்பர் 15-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.