"இந்தியாவிற்கே முன்னோடி தமிழ்நாடு தான்".! மைக்ரோசாஃப்ட் இயக்குனர் தமிழக முதல்வருக்கு பாராட்டு.!
இந்தியாவிலேயே பல திட்டங்களுக்கு முன்மாதிரியாக இருப்பது தமிழ்நாடு தான் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரி பாராட்டு தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் மேம்பாட்டிற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மு.க ஸ்டாலின் ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து டெக்னிக்கல் எஜுகேஷன் அண்ட் லேர்னிங் சிஸ்டம் என்ற திட்டம் தமிழக அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்தின் முதல் படியாக 13 அரசு பள்ளிகளில் புதிய கணிப்பொறி திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்திற்காக 3,800 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பிரிவு இயக்குனர் செசில் சுந்தர் பேட்டி அளித்திருக்கிறார். இது தொடர்பாக கூறியிருக்கும் அவர் தமிழ்நாட்டிலேயே பள்ளி குழந்தைகளுக்கு ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தகவல் தொழில்நுட்பத்தை கற்றுத் தரும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கப் போகிறது என தெரிவித்துள்ளார். இந்த புதிய திட்டத்தில் இந்தியாவிற்கே முன்னோடியாக இருப்பதே தமிழக அரசு தான் எனவும் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
நாட்டிலேயே கிராமப்புற மாணவ மாணவிகளுக்கும் ஏஐ தொழில்நுட்பத்தை கற்றுத் தரப்போகும் முதல் மாநிலமாக தமிழக அரசு இருக்கிறது எனவும் தெரிவித்திருக்கிறார். இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசுடன் மைக்ரோசாப்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு ஐந்து லெவலில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தகவல் தொழில்நுட்பத்தை கற்றுத் தரப் போகிறோம் எனவும் கூறியிருக்கிறார்.