முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தூள்..! ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு ரூ.50,000 ஆக வரை உயர்வு...! தமிழக சூப்பர் அறிவிப்பு...!

06:50 AM Nov 24, 2023 IST | 1newsnationuser2
Advertisement

உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு ரூ.50,000/- வரை உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் பிள்ளைகளின் எதிர்காலக் கல்வியை கருத்தில் கொண்டு தொழில் நுட்பக் கல்வி, பட்டப் படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயில அவர்தம் குழந்தைகளுக்கு ஆசிரியர் நல நிதியிலிருந்து ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நிதியுதவியை உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள். இந்த நிலையில் உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு ரூ.50,000/- வரை உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஒவ்வொரு கல்வியாண்டிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஓய்வு பெற்ற, பணியில் இருக்கும்போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு பட்டப்படிப்பிற்கு ரூ.5,000/-ம், பட்டயப்படிப்பிற்கு ரூ.2500/-ம் கடந்த 2021-2022ம் கல்வியாண்டு வரை வழங்கப்பட்டு வந்த நிலையில், பட்டப்படிப்பிற்கு ரூ.10,000/-ஆகவும், பட்டயப்படிப்பிற்கு ரூ.5,000/- ஆகவும் உயர்த்தி 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், 2023-2024 ஆம் கல்வியாண்டு முதல் ஆசிரியர்களின் குழந்தைகள் (ஒரு ஆசிரியருக்கு ஒரு குழந்தைக்கு மட்டும்) உயர் கல்வி பயில்வதற்கு கல்வி கட்டணத் தொகையாக (Tuition fees) ரூ.50,000/-ம் தொழிற்கல்வி பட்டயப்படிப்பிற்கு ரூ.15,000/-ம் வழங்குவதற்கான நிபந்தனைகளைத் தெரிவித்து அதனடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் குழந்தைகளை தெரிவு செய்ய மாநில அளவில் குழு அமைக்க அனுமதி அளித்து ஆணை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Govt staffschool studentsTn teacher
Advertisement
Next Article