இந்தியாவில் பச்ச பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி திமுக தான்..!! - இபிஎஸ் காட்டம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தொழிலதிபர் ரத்தன் டாடா, சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, நடிகர் டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் 3,500 அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளதாகவும், மேலும் சிலர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு விதமான விமர்சனங்கள் இருந்தது.. நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு கூட்டணி தான் காரணம் என பலர் சொன்னார்கள்.. எந்த கூட்டணியும் இல்லாமல் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு ஆட்சி அமைத்த வரலாறு அதிமுகவில் மட்டும்தான் உண்டு.
நம்முடைய கட்சி பலம் உண்டான கட்சி என பேசினார். வீதி வீடாக சென்று உறுப்பினர் அட்டையை வழங்கிய கட்சி அதிமுக கட்சி மட்டும் தான்.. மற்ற கட்சிகள் எல்லாம் விளம்பர திமுக போல் இவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என காட்டிக்கொள்வார்கள்.. 2021 சட்டமன்ற தேர்தலில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து வாக்கு வித்தியாசத்தில் ஸ்டாலின் ஆட்சி அமைத்துள்ளார்.. 34 தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வியை தழுவியது.
கடந்த முறை நடந்த தேர்தலில் ஐம்பதாயிரம் வாக்குகள் மட்டுமே வித்தியாசத்தில் 21 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்திருப்பார்கள்.. பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறவில்லை பல்வேறு பொய்களை வாரி விட்டிருக்கிறார்கள். இந்தியாவின் எந்த ஒரு அரசியல் கட்சியுமே பச்ச பொய் சொல்லி வாக்குகளை பெறவில்லை திமுக மட்டும் தான் இந்த செயலில் ஈடுபட்டு வருகிறது என பேசினார்..
Read more ; அதிமுக வாட்ஸ் ஆப் சேனல்.. தொண்டர்கள் இணைய இபிஎஸ் வலியுறுத்தல்..!!