For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிமுக வாட்ஸ் ஆப் சேனல்.. தொண்டர்கள் இணைய இபிஎஸ் வலியுறுத்தல்..!!

AIADMK WhatsApp channel.. Volunteers insist on Internet EPS..
01:36 PM Dec 15, 2024 IST | Mari Thangam
அதிமுக வாட்ஸ் ஆப் சேனல்   தொண்டர்கள் இணைய  இபிஎஸ் வலியுறுத்தல்
Advertisement

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தொழிலதிபர் ரத்தன் டாடா, சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, நடிகர் டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

அதனைத்தொடர்ந்து, கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் 3,500  அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளதாகவும், மேலும் சிலர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், அதிமுக வாட்ஸ் ஆப் சேனலில் கட்சி தொண்டர்கள் இணைய வலியுறுத்தினார்.

கட்சி தொடர்பான நடவடிக்கைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் இணைய வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு விதமான விமர்சனங்கள் இருந்தது.. நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு கூட்டணி தான் காரணம் என பலர் சொன்னார்கள்.. எந்த கூட்டணியும் இல்லாமல் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு ஆட்சி அமைத்த வரலாறு அதிமுகவில் மட்டும்தான் உண்டு. நம்முடைய கட்சி பலம் உண்டான கட்சி என பேசினார்.

Read more ; அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் என்னென்ன? – விவரம் இதோ..

Tags :
Advertisement