முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"நான் எதிர் கட்சிக்காரன் சார்.." மீண்டும் பாஜக-வுடன் கூட்டணியா.? சந்தேகத்தை கிளப்பும் எடப்பாடி பழனிச்சாமியின் பதில்.!

03:31 PM Feb 12, 2024 IST | 1newsnationuser7
Advertisement

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக சட்டசபை இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி தமிழக அரசு தயார் செய்த உரையை புறக்கணித்ததோடு 4 நிமிடங்களில் தனது பேச்சை முடித்துக் கொண்டு சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பதில் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது .

Advertisement

கடந்த தேர்தல்களில் பாஜக உடன் கூட்டணி அமைத்திருந்த அதிமுக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டணியை முடித்துக் கொண்டது. மேலும் எந்த காலத்திலும் இனி பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேலும் அவர் பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எனினும் திமுக உள்ளிட்ட கட்சிகள் பாஜக மற்றும் அதிமுக இடையே ரகசிய உறவு இருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிமுக கட்சிக்கான கூட்டணி கதவுகள் எப்போதும் திறந்து இருக்கிறது என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி அவர் பேசியதை நான் கேட்கவில்லை என பதில் அளித்து இருந்தார். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதன் மூலம் சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை டார்கெட் செய்வதாக அரசியல் வட்டாரங்களில் ஒரு கருத்து நிலவி வருகிறது.

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை அதிமுக முடித்துக் கொண்ட போதும் இஸ்லாமிய கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் பெரிய ஈடுபாடு காட்டி வருவதாக தெரியவில்லை. எஸ்டிபிஐ மற்றும் ஒரு சில கட்சிகள் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் சிறுபான்மை வாக்கு வங்கியை அதிமுக பக்கம் இழுப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதனை மனதில் வைத்து அவர் எப்போது பேட்டி கொடுத்தாலும் பாஜக கட்சியுடன் இனி கூட்டணி இல்லை என்பதை மீண்டும் மீண்டும் கூறி வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இன்று ஆளுநரின் நடவடிக்கை குறித்த எடப்பாடி பழனிச்சாமியின் பதில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் ஆளுநரின் இன்றைய நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி "இது தமிழக அரசுக்கும் ஆளுநருக்கு இடையேயான பிரச்சனை அவர்களிடம் கேளுங்கள் நான் எதிர்க்கட்சிக்காரன்" என பதிலளித்திருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியை தீவிரமாக எதிர்ப்பதாக கூறிவரும் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பதில் பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். பாஜகவை எதிர்ப்பதாக கூறும் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரின் உரை குறித்து தனது கண்டனத்தை ஏன் பதிவு செய்யவில்லை என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இதனால் அதிமுக மீண்டும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரவலான பேச்சு அடிபடுகிறது.

Tags :
ADMKBJPepsrn ravitn politics
Advertisement
Next Article