முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பரபரப்பு: "சாதி பெயர் குறிப்பிட்டு விவசாயிகளுக்கு சம்மன்.." நிர்மலா சீதாராமன் பதவி விலக கோரி ஜிஎஸ்டி ஆணையர் உண்ணாவிரதம்.!

06:38 PM Jan 17, 2024 IST | 1newsnationuser7
Advertisement

சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு சாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்திய வருவாய்த்துறை மற்றும் ஜிஎஸ்டி துணை ஆணையர் உண்ணாவிரதம் இருக்கும் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து ஜனாதிபதிக்கும் புகார் மனு ஒன்றையும் அனுப்பி இருக்கிறார் .

Advertisement

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அப்பம்மா சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஏழை விவசாயிகளான கண்ணப்பன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் குணசேகரன் என்பவர் அபகரிக்க முயன்றதாக தெரிகிறது. இது தொடர்பாக எழுந்த பிரச்சனையை தொடர்ந்து விவசாயிகள் கண்ணப்பன் மற்றும் கிருஷ்ணனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. அந்த சம்மனில் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்களான கிருஷ்ணன் மற்றும் கண்ணப்பனின் சாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பியதாக புகார் எழுந்திருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இந்த சம்பவத்தை சேலம் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை வருவாய்த்துறை மற்றும் ஜிஎஸ்டி அலுவலகத்தில் துணை ஆணையராக பணியாற்றும் பாலமுருகன் என்பவர் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி இருக்கிறார் . அந்தக் கடிதத்தில் நிர்மலா சீதாராமன் பதவிக்கு வந்த பிறகு தான் இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடந்து வருவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் அமலாக்க துறையின் சம்மனில் இரண்டு நபர்களின் சாதி பெயரை குறிப்பிட்டது மிகவும் கண்டனத்திற்குரிய செயல் எனவும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இது போன்ற தவறுகளுக்கு பொறுப்பேற்று நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் அல்லது ஜனாதிபதி அவரை டிஸ்மி செய்ய வேண்டும் எனவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அரசாங்கத்திடம் வயது முதிர்ந்தோருக்கான பென்சன் பெற்று வரும் இரண்டு நபர்களின் மீது அபாண்டமாக பழி சுமத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் . மாநில அரசு ஊழியர்கள் தான் அரசியல்வாதிகளின் அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் ஆனால் தற்போது மத்திய அரசு ஊழியர்களும் அரசியல்வாதிகளின் அழுத்தத்திற்கு ஆளாவது நடைபெற்று வருவதாக தெரிவித்திருக்கிறார். இது போன்ற நடவடிக்கைகளுக்கு வருத்தம் தெரிவித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்த அவர் இன்று முதல் தனது உண்ணாவிரதத்தையும் தொடங்கி இருக்கிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Castiest RemarksDemands ResignationfarmersGST Comissioner Hunger StrikeTamilnadu
Advertisement
Next Article