முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வந்துவிட்டது EB புகார் ஆப்!... இனிமேல் போன் பண்ண தேவையில்லை!… தமிழ்நாடு மின்வாரியம் அதிரடி!

06:25 AM Feb 17, 2024 IST | 1newsnationuser3
Advertisement

மின் தடை, மீட்டர் பழுது, கூடுதல் மின் கட்டண வசூல் உள்ளிட்டவைகள் தொடர்பான புகார்கள் அளிக்க TANGEDCO என்ற செயலியில் புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

TANGEDCO செயலியை பயன்படுத்தி எளிதாக லாக் இன் செய்து உங்கள் புகாரை அளிக்கலாம். இதில் லாகின் செய்த பின் உங்கள் இபி நம்பர் மற்றும் போன் எண்ணை வழங்க வேண்டும். அதன்பின் என்ன மாதிரியான புகார் என்பதை கொடுக்க வேண்டும். மின்தடை, மீட்டர் பழுது, கூடுதல் மின்கட்டண வசூல் உள்ளிட்ட புகார்களை இனி செல்ஃபோன் 2 செயலியில் புகாரளிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது TANGEDCO. மின்னகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக இனிமேல் அதிவேகத்தில் மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி புகார் கொடுத்த 2 மணி நேரத்திற்குள் மின்தடை தொடர்பான புகார்களை சரி செய்ய வேண்டும். மின்சார வயர்கள் தொடர்பான பிரச்சனை 5 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும். பெரிய பிரச்சனைகள் , டிரான்ஸ்பார்ம் பிரச்சனைகளை 10 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும். புதிய மின்சார இணைப்புகளை ஏற்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் அதை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. 44 மின் பகிர்மான வட்டங்களாக தமிழ்நாடு மின் வாரியம் தற்போது செயல்படுகிறது. இப்படி ஒவ்வொரு வட்டத்திலும் மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் செயல்படுகிறது. இந்த வாரியம்தான் மக்களின் குறைகளை போக்க உள்ளது.

Tags :
EB புகார் ஆப்இனிமேல் போன் பண்ண தேவையில்லைதமிழ்நாடு மின்வாரியம் அதிரடி
Advertisement
Next Article