இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் தலைமுடி அடர்த்தியாக இருக்கும்..!! ரொம்ப ஈசிதான்..!!
உங்களின் அன்றாட உணவுப் பழக்கங்களை மாற்றுவதன் மூலம் அடர்த்தியான மற்றும் உறுதியான கூந்தலை நீங்கள் பெறலாம்.
ஆண், பெண் இருவருக்குமே தற்போது பெரிய பிரச்சனையாக இருப்பது முடி உதிர்வது தான். மன அழுத்தம், போதிய ஊட்டச்சத்து இன்மை, ஹார்மோன் சமநிலையின்மை இப்படி முடி உதிர்வை அதிகரிக்க பல காரணங்கள் இருந்தும். அதுஒருபக்கம் இருந்தாலும், கண்ட ஷாம்புகளையும் போட்டு முடி உதிர்வை இன்னும் அதிகமாக்கிக் கொள்கிறோம்.
நாம் அன்றாடம் பருகும் பானங்கள் சில கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. அந்தவகையில், கேரட் சாறு பருகுவதன் மூலம் இளநரைகள் தடுக்கப்பட்டு, அடர்த்தியான, உறுதியான மற்றும் நீண்ட கூந்தலை பெறலாம். கேரட் சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் விற்றமின்கள் நிறைவாக உள்ளது இது கூந்தலுக்கு நிறைவான ஆரோக்கியத்தை வழங்குகின்றது.
வெள்ளரி சாறு பருகுவதன் மூலம் உங்கள் உச்சந்தலை குளிர்ச்சியடைந்து கூந்தல் வறட்சி தடுக்கப்படுகிறது. வெள்ளரி சாற்றிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் விற்றமின்கள் நிறைவாக உள்ளது. கற்றாழை சாற்றில் அதிகளவு விற்றமின் ஏ, சி மற்றும் ஈ உள்ளது. இது, உங்கள் தலைமுடியை அடர்த்தியாகவும் வலுவாகவும் மாற்றுவதற்கு உதவுகிறது.
கீரை சாற்றில் இரும்புச்சத்து மற்றும் பயோட்டின் அதிகமாக உள்ளது. இது உங்கள் உடலுக்கு ஆக்ஸிஜனை வழங்க மற்றும் கடத்த உதவுகிறது. ஃபெரெடின் என்ற கலவையும் கீரை சாற்றில் உள்ளதுடன், இது புதிதாக தலைமுடி வளர்வதற்கு ஊக்குவிக்கிறது.
Read More : ’’16 பெற்று பெருவாழ்வு வாழ்க’’..!! அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க சொன்ன முதல்வர் ஸ்டாலின்..? உண்மை என்ன..?