For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாரடைப்பு ஏற்படாமல், நீண்ட ஆயுசுடன் வாழ ஆசையா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..

easy way to lead a healthy life
05:36 AM Jan 25, 2025 IST | Saranya
மாரடைப்பு ஏற்படாமல்  நீண்ட ஆயுசுடன் வாழ ஆசையா  அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்
Advertisement

ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க முக்கிய காரணம் இதயம் தான். நமது இதயம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் தான் நாம் வளவே முடியும். ஆனால் நாம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க எந்த முயற்சியையும் எடுப்பது இல்லை. கண்ட உணவுகளை சாப்பிட்டு இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விடுகின்றனர். இதனால், முடிந்த வரை ஆரோக்கியம் இல்லாத உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

Advertisement

இந்நிலையில், ரத்த குழாயில் ஏற்படும் அடைப்பு தான், உடலில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு காரணமாக உள்ளது. அந்த வகையில், இது போன்ற இதய நோய்கள் வராமல் தடுப்பது, மேலும், ஏற்கனவே இருக்கும் நோய்யை எப்படி குணப்படுத்துவது என்பதை பற்றி மருத்துவர் தீபா, பிரபல யூடியூப் சேனலில் பேசியுள்ளார். அதில் அவர் கூறும் போது, இதயத்தின் ஆரோக்கியத்திற்கு, பூண்டு ஒரு பெரிய வரப்பிரசாதம்.

பூண்டை பாலில் வேக வைத்தோ, அல்லது சமைக்கும் போது உணவில் சேர்த்து சாப்பிடுவதால் எந்த பயனும் இல்லை. பூண்டின் முழு பலனையும் பெற, அதை துண்டு துண்டாக நறுக்கி, காலை உணவில் பச்சையாக சாப்பிட வேண்டும். ஆனால் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அசிடிட்டி ஏற்படும். இதனால் கட்டாயம் பூண்டை உணவுடன் சேர்த்து தான் சாப்பிட வேண்டும்.

இதயத்தின் ஆரோக்கியத்திற்கு, ஆளி விதை, சோம்பு, உள்ளிட்ட பொருட்களும் பெரிதும் உதவும். ஒரு வெற்றிலையில், ஆலி விதை, சோம்பு, உலர்ந்த திராட்சை, பேரிட்சம் பழம் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம். இதனால், ரத்த குழாயில் ஏற்படும் அடைப்புகளை தடுக்க முடியும். இதற்கு பதில், நீங்கள் பாதாம் அல்லது நிலக்கடலையை ஊறவைத்து சாப்பிடலாம்.

நிலக்கடலையை வறுத்து சாப்பிடுவதால் எந்த பயனும் இல்லை. நாம் சாப்பிடும் உணவில் கட்டாயம் ஃபைபர் அதிகம் இருக்க வேண்டும். அப்போது தான், உடலில் கொழுப்பு எங்கேயும் படியாமல், மலம் வழியாக வெளியேறி விடும். இதனால், உங்கள் உணவில் அடிக்கடி கீரைகள், காய்கறிகள், பழங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.

Read more: நோய் இல்லாமல் வாழ, இது தான் ஒரே வழி; நிபுணர்கள் அளித்த விளக்கம்..

Tags :
Advertisement