உங்கள் பழைய துருப்பிடித்த தோசைக் கல்லை புதுசு போல் மாற்ற வேண்டுமா? அப்போ உடனே இதை செய்யுங்க..
ஒரு சிலர் வீட்டில், தோசைக் கல்லை பார்த்தாலே தோசை சாப்பிட தோனாது. அவ்வளவு அழுக்காகவும் பழசாகவும் இருக்கும். ஒரு சிலர் வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலும், தோசைக் கல்லையும் சுத்தம் செய்ய வேண்டும் என்பதையே மறந்து விடுவர்கள். ஆனால் நாம் அடிக்கடி தோசைக் கல்லை சுத்தம் செய்ய வேண்டும். அந்த வகையில் எப்படி சுலபமாக தோசைக் கல்லை சுத்தம் செய்வது என்பது குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
இதற்கு முதலில் தோசைக் கல்லை நன்கு சூடுபடுத்த வேண்டும். பின்னர் சூடான கல்லில், ஒரு கைப்பிடி கல் உப்பை தூவ வேண்டும். பின்னர், அதில் எலுமிச்சை பழத்தின் சாறு பிழிந்து விட வேண்டும். மேலும், அந்த எலுமிச்சை பழத்தின் தோலை, தோசைக் கல்லில் தேய்க்க வேண்டும். அப்போது, உங்கள் தோசைக் கல்லில் உள்ள துரு மற்றும் அழுக்குகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி விடும்.
இப்போது, அடுப்பை ஆப் செய்து விட்டு, தோசைக் கல் மீது சிறிது பாமாயில் ஊற்ற வேண்டும். பின்னர், அதை ஒரு பேப்பர் வைத்து தோசைக் கல் முழுவதும் தேய்த்து விட வேண்டும். இதனால், கல்லில் உள்ள துருக்கறைகளை சுலபமாக அகற்றலாம். இதனை செய்யும் போது அடுப்பை ஆஃப் செய்யக் கூடாது. இப்போது மீண்டும் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து, அதன் தோலை வைத்து தோசைக் கல்லை சுத்தப்படுத்த வேண்டும்.
இதன் பின்னர், அடுப்பை ஆஃப் செய்து விட்டு தோசைக் கல் மீது இருக்கும் துருக்களை அகற்றி விடுங்கள். இதையடுத்து, வாழைத்தண்டு வைத்து தோசைக் கல்லை துடைக்க வேண்டும். பின்னர், பாத்திரம் தேய்க்கும் சோப் வைத்து தோசைக் கல்லை கழுவ வேண்டும். நன்கு கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகர் மற்றும் சிறிதளவு டூத் பேஸ்டைக் கலந்து, தோசைக் கல் மீது தேய்க்க வேண்டும்.
பின்னர் 5 நிமிடங்களில் தோசைக் கல்லை தண்ணீர் ஊற்றி கழுவி, ஈரம் இல்லாமல் துடைத்து விடுங்கள். இப்போது அதில் எண்ணெய் தடவி சுமார் 3 மணி நேரங்கள் வெயிலில் காய வைத்து விடுங்கள். இப்போது உங்கள் பழைய தோசைக்கல் புதுசு போல் ஜொலிக்கும்.
Read more: ரேஷன் அரிசி கழுவும் போது, இந்த ஒரு பொருளை சேர்த்துக்கோங்க.. இனி வேற அரிசியே வாங்க மாட்டீங்க..