சுருங்கிய நுரையீரலை கூட விரித்து விடும்; இந்த அற்புத மருந்தை பற்றி கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..
பலரது வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு அற்புத மருந்து என்றால் அது கற்பூர வள்ளி தான். கற்பூர வள்ளி இலைகள் குறித்து ஏராளமான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல், மருந்து தயாரிக்கும் ஒரு சில நிறுவனங்களும், கற்பூர வள்ளி பெருமளவு பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். கற்பூர வள்ளி இலைகளில் உள்ள தைமோல் மற்றும் கார்வகோல், மருந்துகள் தயாரிக்க பயன்படுகின்றன.
கற்பூர வள்ளி இலைகளில், பாக்டீரியா தொற்று நோய்களை எதிர்த்து போராடும் ஆற்றல் அதிகம். இதனால் வைரஸ் பரவலால் ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்படுகிறது. பொதுவாக, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் சுருங்கி விடும். அந்த சூழலில், சுருங்கிய நுரையீரல் குழாய்களை கூட விரிக்கும் ஆற்றல் கற்பூர வள்ளி இலைகளுக்கு உண்டு. மேலும், இது வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கும் இது தீர்வு அளிக்கிறது.
ஒரு வேலை, உங்களுக்கு தலைவலி, முதுகு வலி போன்ற பாதிப்புகள் இருந்தால், கற்பூர வள்ளி இலையை விட சிறந்த வலி நிவாரணி இருக்கவே முடியாது. இவ்வளவு ஏன், பூச்சி கடித்து விட்டால் கூட இந்த இலையை பிழிந்து தடவினால் அவை குணமாகும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அதிக பால் சுரக்க கற்பூர வள்ளி இலைகள் பெரிதும் உதவும்.
இப்படி கற்பூர வள்ளி இலைகளில், ஏராளமான நன்மைகள் இருப்பதாக ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த கற்பூர வள்ளி இலைகளை, எப்படி மருந்தாக பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். இதற்கு முதலில், 5 கற்பூர வள்ளி இலைகள், 4 மிளகு ஆகியவற்றை இடித்து எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து சாப்பிடலாம். இதனால் நாள் பட்ட சளி கூட விரைவில் குணமடையும்.