துர்நாற்றம் வீசும் உங்கள் பழைய மெத்தையை புதுசு போல் மாற்ற வேண்டுமா? உடனே இதை செய்யுங்க..
என்ன தான் நமது வீடு சுத்தமாக இருந்தாலும், வீட்டில் இருக்கும் மெத்தைகள் பெரும்பாலும் அசுத்தமாக தான் இருக்கும். இதற்க்கு முக்கிய காரணம் மெத்தையை நம்மால் சாதாரண துணிகள் போன்று துவைக்க முடியாது. மெத்தையை சுத்தப்படுத்துவது கடினமான காரியம். இதனால் சிலர் மெத்தையை சுத்தம் செய்யாமலே விட்டு விடுவார்கள். இப்படி பல நாட்கள் சுத்தம் செய்யாத மெத்தையால் பல நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் நீங்கள் உங்கள் மெத்தையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். அந்த வகையில், உங்கள் பழைய மெத்தையை எப்படி சுலபமாக சுத்தம் செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஆம், இதற்க்கு முதலில், காலாவதியான ஏதாவது இரண்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த மாத்திரைகளை இடித்து, அதில் பாதி அளவை எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது அதனுடன், முகத்திற்கு பயன்படுத்தும் பௌடர் சிறிதளவு, ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா ஆகிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கி வைத்துக்கொள்ளுங்கள். இப்போது இந்த பொடியை, ஒரு வடிகட்டியின் மூலம் மெத்தை முழுவதும் தூவி விட வேண்டும். இந்தப் பொடியை நேரடியாக மெத்தையில் தூவ கூடாது. பொடியை தூவி, சுமார் 10 நிமிடங்கள் எதுவும் செய்யாமல் விட்டுவிடுங்கள்.
இப்படி செய்வதால் உங்கள் மெத்தையில் உள்ள துர்நாற்றம் நீங்கி விடும். இப்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, அதில் மீதம் இருக்கும் மாத்திரை பொடி, ஒரு ஸ்பூன் கம்ஃபோர்ட் சேர்த்து நன்கு கலக்கி விடுங்கள். பின்னர் இந்த தண்ணீரில், உங்கள் வீட்டில் இருக்கும் பழைய சாக்ஸை நனைத்து, அதனை க்ளவுஸ் போல் கையில் மாட்டிக் கொண்டு, மெத்தையை சுத்தம் செய்யுங்கள். இதனால், மெத்தையில் உள்ள அனைத்து கறைகளும் நீங்கி விடும். நீங்கள் இப்படி செய்வதால், மெத்தையை வெயிலில் காய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிற்க்குள் ஃபேன் காற்றில் காய வைத்தாலே போதுமானது.
Read more: தூசி பறக்காமல், சுலபமாக சீலிங் Fan-ஐ சுத்தம் செய்ய ஈஸியான டிப்ஸ்!!!