For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

12 ஆவது தேர்ச்சி போதும்.. அரசு வேலை.. டைம் முடிய போகுது.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

Check the application procedure and required documents for 2 government vacancies for laboratory specialist in Tirupur.
12:58 PM Jan 12, 2025 IST | Mari Thangam
12 ஆவது தேர்ச்சி போதும்   அரசு வேலை   டைம் முடிய போகுது   உடனே அப்ளை பண்ணுங்க
Advertisement

திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலியாக உள்ள Lab Technician பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இரண்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும், இப்பணி அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கல்வி தகுதி : 10, +2  அறிவியல் பாடத்துடன் தேர்ச்சி மற்றும் மருத்துவ கல்வி இயக்குனரால் கையொப்பமிட்ட சான்றிதழ் பெற்ற ஆய்வுக்கூட பயிற்சி பட்டம் அல்லது பட்டயம், கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் ஒரு வருடத்திற்கு மேல் பணி புரிந்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு: 62 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். இப்பணிக்கான மாத ஊதியம் 13 ஆயிரம் வரை வழங்கப்பட இருக்கின்றது.

விண்ணப்பிக்கும் முறை : Bio Data with Passport size Photoவிண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்குரிய அனைத்து தகுதி சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்கள் (Attested Xerox Copies) இணைத்து அனுப்ப வேண்டும்.இத்துடன் ரூ.25 தபால் ஒட்டிய சுய விலாசமிட்ட 4*10 கவருடன் (இரண்டு) கையொப்பமிட்ட கடிதத்துடன் கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவு தபாலில் விண்ணப்பிக்கவும்.

தேர்வு செய்யும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், அறை எண்: 1, கல்யாணம் பெட்ரோல் பங்க் எதிரில், அரசு மருத்துவமனை வளாகம் (பழைய பேருந்து நிலையம் அருகில்), திருப்பூர் மாவட்டம் – 641604

Read more ; இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடும் சரிவு.. என்ன காரணம்..?

Tags :
Advertisement