எண்ணெய் பிசுக்குடன் இருக்கும் உங்கள் சமையலறை, புதுசு போல் ஜொலிக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்க..
வருடம் முழுவதும் மூன்று வேளை சாப்பாடு, காபி, டீ, ஸ்நாக்ஸ் என காலை முதல் இரவு வரை பிசியாக இருக்கும் இடம் என்றால் அது சமையலறை தான். இதனாலோ என்னவோ, என்னதான் நாம் துடைத்து துடைத்து வைத்தாலும் சமையல் மேடை, பாத்திரம், சுவறு என அனைத்திலும் அடிக்கடி எண்ணெய் பசை கறைகள் ஏற்படும். . இதனால் சமையல் அறையின் அழகே கெடுத்துவிடும். பொதுவாக சமையல் அறையை ஒரு நாள் கூட தவறாமல் பராமரித்தால் மட்டும் தான் அழகாக இருக்கும். தினமும் நாம் சமைப்பதால், இந்த எண்ணெய் கறைகள் சுவற்றில் கொஞ்சம் கொஞ்சமாக படிந்து, கிச்சன் நிறத்தையே மாற்றி விடும்.
இப்படி பல நாள் படிந்த கறையை நீக்குவது சுலபமான காரியம் இல்லை. ஒரு சில வீடுகளில், எண்ணெய் பிசுக்கு படும் சுவர்களில் டைல்ஸ் இருக்கும். அப்படி ஒட்டியிருக்கும் டைல்ஸை சாதாரண துணியால் துடைத்து விட்டு, பிறகு வெதுவெதுப்பான நீரில் சிறிது பேகிங் சோடா கலந்து, எண்ணெய் பிசுக்கு இருக்கும் இடத்தில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறவிட வேண்டும். பின்னர் உலர்ந்த துணியால் அதை துடைத்தால் அந்த டைல்ஸ் பளிச்சென்று புதுசு போல் மின்னும்.
அடுப்பின் பின்புறம், கேஸ் அடுப்பு, சமையல் மேடை என எல்லா இடங்களிலும் இருக்கும் எண்ணெய் பிசுக்கை சுலபமாக நீக்க: எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி, அதை உப்பில் தொட்டு எண்ணெய் பிசுக்கு இருக்கும் இடத்தில் தேய்த்தால் எண்ணெய் பிசுக்கு சுலபமாக நீங்கி விடும். இதற்க்கு பதில், கடலைமாவுடன் தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவினாலும் சமையல் மேடையில் உள்ள எண்ணெய் பிசுக்கு நீங்கிவிடும். தினமும் இப்படி செய்ய முடியாத நிலையில், தினமும் சாதாரண துணியில் துடைத்து, வாரம் ஒரு முறை சோப்பு நீரால் துடைத்தால் கிச்சன் எப்பொழுதும் பளபளப்பாக இருக்கும்.
சமையலறை ஸ்விட்ச் போர்டை சுற்றியும் இருக்கும் எண்ணெய்ப் பிசுக்கை நீக்க, சாதாரண துணியில் சோப்பு தேய்த்துத் துடைத்தால் போதும், புதிது போல் மாறும். மேலும், இரண்டு லிட்டர் தண்ணீரில், அரை கப் வினிகர், கால் கப் பேக்கிங் சோடா கலந்து, அந்த தண்ணீரை வைத்து தரையை துடைத்தால் சமையலறை தரை சுத்தமாக இருப்பதுடன் புதிது போல் மின்னும்.
Read more: இது தெரிஞ்சா, இனி நின்றுக்கொண்டே தண்ணீர் குடிக்க மாட்டீங்க.. வாத நோய் கூட ஏற்படுமாம்!!!