குளிர்காலத்தில், கீரையை அதிகம் சாப்பிட வேண்டாம்.. மீறினால் பெரும் ஆபத்து!!
ஆரோக்கியமான உணவு என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கீரை தான். எல்லா வகை கீரைகளிலும் பல விதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கீரையை சாப்பிடுவது உண்டு. கீரையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், சோடியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, குளோரின், புரதம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற பல சத்துக்கள் உள்ளது. கண் ஆரோக்கியம் முதல், ரத்த சோகையை குணப்படுத்துவது வரை பல நன்மைகள் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும்.
என்ன தான் கீரையில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், குளிர்காலத்தில் அதை அதிகமாக சாப்பிடக் கூடாது. மேலும், கீரையில் உள்ள ஹிஸ்டமைன் உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் குளிர்காலத்தில் கீரையை அதிகமாக சாப்பிட கூடாது. கீரையை அதிகம் சாப்பிடும் போது, அதில் உள்ள ஆக்சாலிக் அமிலம் சிறுநீரகத்தில் குவிய தொடங்கும். இதனால் இது சிறுநீரக கல் பிரச்சனை மோசமடையும். இதனால் சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் கீரையை அதிகம் சாப்பிட வேண்டாம்.
மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள், குளிர்காலத்தில் கீரையை அதிகம் சாப்பிடும் போது, கீழ்வாதம் ஏற்படும். இதனால் மூட்டு வலி ஏற்படும். மேலும், சர்க்கரை நோயாளிகள், தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் குளிர்காலத்தில் கீரை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப, எந்த உணவாக இருந்தாலும் அளவோடு சாப்பிடுவது தான் உடலுக்கு நல்லது.
Read more: பிரியாணியில், புதினா இலைகளை ஏன் கட்டாயம் சேர்க்க வேண்டும் தெரியுமா?