For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கவனம்..! நெல்லை & தென்காசியில் நில அதிர்வு... பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு...!

Earthquake in Nellai & Tenkasi... District collector important announcement to people
06:05 AM Sep 23, 2024 IST | Vignesh
கவனம்    நெல்லை  amp  தென்காசியில் நில அதிர்வு    பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு
Advertisement

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்த நிலையில், இதுகுறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; அம்பாசமுத்திரம் பகுதியில் பொதுமக்களால் உணரப்பட்ட நில அதிர்வு குறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் (National Centre for Seismology) மற்றும் கடலியல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (Indian National Centre for Ocean Information Services) ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலான நில அதிர்வுகள் ஏதும் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரிக்டர் அளவுகோலில் 1 முதல் 3 வரையிலான லேசான நில அதிர்வுகள் ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் நடைபெறும். அவற்றில் மிகச் சிறிய அளவிலானவை இயந்திரங்களில் பதிவாகாது. இதுபோன்ற அதிர்வுகளால் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதால் அச்சம் கொள்ள தேவையில்லை என்று அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுப்படி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை, புயல், வெள்ளம், நில அதிர்வு, நிலச்சரிவு உள்ளிட்ட அனைத்து வகை பேரிடர்கள் குறித்தும் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் கூட்டுப்பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி அருகாமை மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சி நிகழ்வுகளில் கலந்து கொண்டு பொதுமக்கள் இயற்கை பேரிடர்கள் குறித்து அறிந்து கொள்ளவும், பேரிடர்கள் தொடர்பாக முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும், பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Advertisement