For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

DMK | "உதயசூரியனுக்கு போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு"… சேலத்தில் தெறிக்க விட்ட உதயநிதி ஸ்டாலின்.!!

08:00 PM Apr 08, 2024 IST | Mohisha
dmk    உதயசூரியனுக்கு போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு … சேலத்தில் தெறிக்க விட்ட உதயநிதி ஸ்டாலின்
Advertisement

DMK: சேலம் பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு பிரதமர் மோடிக்கு வைக்கும் வேட்டு என வைத்திருக்கிறார்.

Advertisement

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. 18-வது பொது தேர்தலில் வாக்குப்பதிவு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன . தமிழகத்தில் இந்தியா கூட்டணி சார்பாக திமுக(DMK) மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் உத்வேகத்துடன் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் இளைஞர் நல்வாழ்வுத்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தின் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடி இருக்கிறார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் திமுகவிற்கு போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு இயற்கை பேரழிவு தமிழகத்தில் நடைபெற்ற போதும் பிரதமர் மோடி கைகட்டி வேடிக்கை பார்த்ததாக குறிப்பிட்டு இருக்கிறார். தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Read More: Annamalai | கோவையில் பரபரப்பு.!! பிரச்சாரத்தில் கேள்வி கேட்ட நபரை தாக்கிய பாஜக தொண்டர்கள்.!!

Advertisement