அட்டகாசமான இ-சைக்கிள்!! ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்!! விலை எவ்வளவு தெரியுமா?
பிரபல எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனமான இ-பைக் கோ நிறுவனம் மின்சார வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலில் பிரபலம். இந்நிறுவனம் தற்போது மின்சார வாகனத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. டிரான்சில் பிராண்டின் கீழ் டிரான்சில் இ1 எனும் எலெக்ட்ரிக் சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த விபரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
டிரான்சில் இ1 எலெக்ட்ரிக் சைக்கிளின் விலை ரூ.45 ஆயிரம். விலை கொஞ்சம் அதிகம் என்றாலும், இந்த சைக்கிளில் அதற்கேற்ற சிறப்பம்சங்கள் உள்ளன. நகர்புறவாசிகளைக் கருத்தில் கொண்டே இந்த சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த சைக்கிள் விற்பனைக்கும் வர உள்ளது. ஸ்டீல் ஃப்ரேமைக் கொண்டு இ-சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளதால், சைக்கிளின் உறுதித் தன்மை அதிகம். டபுள் வால்லட் அலாய் ரிம்கள் கொண்ட சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன் சிங்கிள் ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் லித்தியம் இயன் பேட்டரி, பிஎம்எஸ் வசதி என பல்வேறு அம்சங்கள் இந்த சைக்கிளில் உள்ளன. இந்த சைக்கிளில் உள்ள பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 40 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 2 மணி நேரம் முதல் இரண்டரை மணி நேரம் வரை ஆகும்.
இந்த சைக்கிளில் 3 விதமான ரைடிங் மோட்கள் உள்ளன. க்ரூஸ், வாக் மற்றும் த்ராட்டில் எனும் மூன்று விதமான இயக்க மோட்டார் தான் அவை. இந்த சைக்கிளை எளிதில் வீட்டிலேயே வைத்து சார்ஜ் செய்து கொள்ளலாம். அதற்கு ஏதுவாக ஸ்மார்ட் சார்ஜரும் வழங்கப்பட்டுள்ளது. பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆனவுடன் தானாகவே கட்-ஆஃப் ஆகும் வசதி கொண்டது.
இதுதவிர இந்த சைக்கிளில் சிறிய எல்இடி ஸ்மார்ட் திரை ஒன்றும் உள்ளது. இந்த திரை வாயிலாக சைக்கிளின் வேகம், நேரம், பேட்டரி அளவு போன்ற முக்கிய தகவல்களை பார்த்துக் கொள்ள முடியும். இப்படி பல்வேறு சிறப்பம்சங்களுடன் எலக்டரிக் சைக்கிளை உருவாக்கியுள்ளது இ பைக் கோ நிறுவனம். விரைவில் ஷோ ரூம்களில் விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; பக்கத்து வீட்டு மரம் உங்களுக்கு இடையூறாக இருந்தால் என்ன செய்வது? சட்டம் சொல்வதென்ன?