For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மின் மீட்டர்களுக்கு தட்டுப்பாடு... இணைப்பு வழங்குவதில் தாமதம்..!! - TANGEDCO போட்ட அதிரடி உத்தரவு

Due to the shortage of EB meters there has been a delay in the provision of new electricity connections.
09:36 AM Nov 04, 2024 IST | Mari Thangam
மின் மீட்டர்களுக்கு தட்டுப்பாடு    இணைப்பு வழங்குவதில் தாமதம்       tangedco போட்ட அதிரடி உத்தரவு
Advertisement

இபி மீட்டர் தட்டுப்பாடு காரணமாக புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட தொடங்கி உள்ளது. மீட்டர் வாங்க மக்கள் பலர் காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வீடுகள் உட்பட அனைத்து நுகர்வோருக்கும் பொருந்தும் வகையில் மீட்டர் விற்கும் நிறுவனங்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. இவர்களிடம் மீட்டர் வாங்கிக்கொள்ளலாம். மின்சார வாரியத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

Advertisement

மீட்டர் வாங்கிய பிறகு, நுகர்வோர் மீட்டர்களை நிறுவுவதற்கு முன் டேம்பர்-ப்ரூஃப் செய்ய மின்சார வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். மின்சார வாரிய அதிகாரிகள், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மீட்டர்களை பொருத்துவார்கள். ஆனால் இப்போது இபி மீட்டர் தட்டுப்பாடு காரணமாக புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட தொடங்கி உள்ளது. இதனால் புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்தான் இனி தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இனி கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் 3 நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்க வேண்டும். புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது அங்கே கூடுதல் மின் சாதனங்களான சிறிய அளவிலான டிரான்ஸ்பார்மர் அமைக்க தேவை இல்லாத பட்சத்தில் 3 நாட்களில் மின்சாரம் தர வேண்டும். இல்லையென்றால் 7 நாட்களில் மின்சாரம் தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி வெளியான அறிவிப்பு இந்த மாதம் நடைமுறைக்கு வருகிறது,

இது போக மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் நிலத்தடி கேபிள்களுக்கு (UG) அதிக மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இப்படி புகார்கள்; எழுந்ததையடுத்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) உடனடியாக அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Read more ; ரயில்வே காப்பீடு பற்றி உங்களுக்கு தெரியுமா..? வெறும் 35 பைசா செலுத்தினால் ரூ.10 லட்சம் கிடைக்கும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
Advertisement