தென் மாவட்டங்களில் பலியின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு.! நிவாரணம் எப்போது.? தலைமைச் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு.!
கடந்த வாரம் தென் மாவட்டங்களில் புயல் மற்றும் கனமழை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தப் புயல் மற்றும் மழையால் தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகினர். அதிகபட்சமாக மழை காயல்பட்டினம் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் பதிவாகி இருந்தது.
இந்த பலத்த மழைக்கு தூத்துக்குடி மாவட்டம் மிகப்பெரிய சேதத்திற்கு உள்ளானது. இந்தப் பகுதிகளில் பொது மக்களுக்கு நிவாரண பணிகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் மழையால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரத்தை தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டு இருக்கிறார். மேலும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழையால் 38 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையினால் இதுவரை 38 பேர் உயிரிழந்திருப்பதாக தலைமைச் செயலாளர் தெரிவித்திருக்கிறார். சில இடங்களில் அடையாளம் தெரியாத உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பல இடங்களில் இன்னும் வெள்ளை நீர் முழுமையாக வடியாததால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த கனமழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சேதங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அந்தப் பணிகள் முடிவடைந்த உடன் தென் மாவட்டங்களுக்கு வழங்கப்பட இருக்கின்ற நிவாரணம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்திருக்கிறார். இந்த மாத துவக்கத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் தென் மாவட்டங்களை கடும் மழை பாதித்திருக்கிறது.