For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது" - வைரலாகும் பாகிஸ்தானியரின் பேச்சு!

01:49 PM Apr 23, 2024 IST | Mari Thangam
 இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது    வைரலாகும் பாகிஸ்தானியரின் பேச்சு
Advertisement

துபாயில் வரலாறு காணாத மழை பெய்வதற்கு அபுதாபியில் கட்டப்பட்ட இந்து கோயில்தான் காரணம் என்றும், அல்லாஹ்வின் கோபத்தை மழையின் வடிவில் துபாய் எதிர்கொண்டிருக்கிறது எனவும் பாகிஸ்தானியர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

பாலைவன பகுதியான வளைகுடா நாடுகளில் பெரும்பாலும் செயற்கை முறையிலேயே மழை பொழிவிக்கப்படுகின்றன. அங்கு மழை பொழிவது ஆச்சரியமான ஒன்று எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வளைகுடா நாடுகளுக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் வரலாறு காணாத வகையில் மழை பொழிந்தது. அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் 75 ஆண்டுகளில் மிக அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது எனக் கூறியது.

இந்நிலையில், துபாயில் பெய்த வரலாறு காணாத மழைக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமிநாராயண் கோயில்தான் காரணம் என்று ஒரு பாகிஸ்தானியர் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி 14 அன்று அபுதாபியில் அமீரகத்தின் முதல் இந்துக் கோவிலான சுவாமி நாராயண் கோவிலைத் திறந்து வைத்தார். இந்நிலையில் கோயில் திறக்கப்பட்ட சில மாதங்களுக்குள் அதைப்பற்றி இப்படியான அதிர்ச்சி அளிக்கும் கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அந்த வீடியோ பதிவில், “துபாயில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளம் அல்லாஹ் அளித்த தண்டனை. அபுதாபியில் கட்டிய பாப்ஸ் மந்திர் எனப்படும் சுவாமிநாராயண் கோயில்தான் இதற்குக் காரணம். சிலை உடைப்பவர்களின் பூமியில் விக்கிரக வழிபாட்டாளர்களுக்காக கோயில் கட்டப்பட்டுள்ளது. அங்கு கோயில் கட்டியதால்தான் துபாய் அல்லாஹ்வின் கோபத்தை மழையின் வடிவில் எதிர்கொண்டிருக்கிறது” என அவர் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement