For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”வேலியே பயிரை மேயலாமா?” புகார் அளிக்க வந்த பெண்ணை கழிவறைக்கு அழைத்து சென்று, டிஎஸ்பி செய்த காரியம்..

dsp sexually abused a woman in bathroom who came to file complaint
07:17 PM Jan 03, 2025 IST | Saranya
”வேலியே பயிரை மேயலாமா ” புகார் அளிக்க வந்த பெண்ணை கழிவறைக்கு அழைத்து சென்று  டிஎஸ்பி செய்த காரியம்
Advertisement

கர்நாடக மாநிலம், பாவகடா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நில வழக்கு தொடர்பான பிரச்சனை இருந்துள்ளது. இதையடுத்து, அவர் தும்குருவில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார். அங்கு, சென்ற பெண், மதுகிரியைச் சேர்ந்த டிஎஸ்பி ராமச்சந்திரப்பாவை சந்தித்து தனது புகாரை தெரிவித்துள்ளார். அப்போது டிஎஸ்பி ராமச்சந்திரப்பாவிற்கு அந்த பெண் மீது ஆசை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதையடுத்து, அவர் அந்த பெண்ணை புகரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் என்னுடன் வா, என்று கூறி அழைத்து சென்றுள்ளார். அந்தப் பெண்ணும் டிஎஸ்பி என்ற மரியாதையில் அவருடன் சென்றுள்ளார். ஆனால் டிஎஸ்பி அந்த பெண்ணை கழிவறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொடூர சம்பவத்தை, நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை எடுத்தது யார், என்பது தெரியாத நிலையில், அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும், இந்த வீடியோ தொடர்பான விசாரணை, விரைவில் எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி கே.வி அசோக் தெரிவித்துள்ளார்.

Read more: உடலுறவுக்கு மறுத்த மனைவி; 13 வயது மகளை உல்லாசத்திற்கு அழைத்த கொடூர தந்தை..

 

Tags :
Advertisement