8 ஜவான்கள் உள்பட 9 பேர் பலி… ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்..!
பிஜாப்பூர் குத்ரு சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த விபத்தில் 8 ஜவான்கள், ஒரு ஓட்டுநர் உள்பட 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிஜாப்பூர் குத்ரு சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நக்சலைட்டுகள் ஐஇடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த விபத்தில் 8 ஜவான்கள், ஒரு ஓட்டுநர் உள்பட 9 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். பல வீரர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. வாகனத்தில் எத்தனை இராணுவத்தினர் இருந்தனர் என்பது பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. நக்சல் நடவடிக்கைக்குப் பிறகு வீரர்கள் திரும்பிக் கொண்டிருந்ததாகவும், அப்போது நக்சலைட்டுகள் குத்ரு சாலையில் பதுங்கியிருந்து IED குண்டுவெடிப்பு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "காயமடைந்த வீரர்கள் விமானம் மூலம் பஸ்தாருக்கு கொண்டு வரப்படுவார்கள், அதன் பிறகு அவர்களை அங்கிருந்து ராய்ப்பூருக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. காயமடைந்த வீரர்கள் மற்றும் வீரமரணம் அடைந்த வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். சம்பவ இடத்திற்கு 6க்கும் மேற்பட்ட வாகனங்களில் கூடுதல் படை அனுப்பப்பட்டது" என தெரிவித்தார்.
Read more ; இவற்றையெல்லாம் பிரஷர் குக்கரில் சமைக்கவே கூடாதாம்..! எச்சரிக்கும் நிபுணர்கள்.. என்ன காரணம்?