For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒருவாரத்திற்கு இந்த உணவு முறைகளை மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!! உடல் எடை டக்குன்னு குறையும்..!!

Follow the 7-day diet plan given below to melt body fat and see a positive change in weight loss.
02:53 PM Jun 09, 2024 IST | Chella
ஒருவாரத்திற்கு இந்த உணவு முறைகளை மட்டும் ஃபாலோ பண்ணுங்க     உடல் எடை டக்குன்னு குறையும்
Advertisement

பெரும்பாலான நேரங்களில் காலை முதல் இரவு வரை விதிமுறைப்படி சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடும் உணவு உடலுக்கு தீங்கு விளைவிக்கிறதா என்பதை யோசிப்பதே இல்லை. உடல் எடையைக் குறைக்க டயட் இருந்தாலும், எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று பலருக்கும் புரிதல் இல்லை. நாம் எப்போது, எப்படி, எதை சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்து தான் உடல் எடை கூடுவதும் குறைவதும். எனவே, இந்த பதிவில் கூறப்பட்டுள்ள உணவு அட்டவணையை பின்பற்றினால் உங்கள் உடல் எடை குறைவதில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

Advertisement

உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து உடல் எடைக் குறைப்பில் நல்ல மாற்றத்தைக் காண கீழே கொடுக்கப்பட்ட வகையில் 7 நாட்கள் உணவுமுறையை மாற்றி பின்பற்றி பாருங்கள். நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

அதாவது, காலையில் எழுந்ததும் காஃபி, டீயை தவிர்த்துவிட்டு எலுமிச்சை மற்றும் தேன் மற்றும் வெதுவெதுப்பான நீரில் காலை தொடங்குங்கள். நீங்கள் விரும்பினால் மூலிகை தேநீர் அல்லது கிரீன் டீ சாப்பிடலாம். ஏதோ ஒரு வகையான டிடாக்ஸ் பானத்துடன் நாளைத் தொடங்குவது மிகவும் முக்கியமானது மற்றும் ஆரோக்கியமானது. ஒரு நாளைக்கு சாப்பிட வேண்டிய காலை, மதிய மற்றும் இரவு உணவு ஒவ்வொன்றும் 300 முதல் 350 கலோரி வரை இருக்குமாறு பாத்துக் கொள்ளுங்கள். தனியாக 300 கலோரியை அன்றைய நாளிற்கு தேவையான ஆரோக்கியமான ஸ்நாக்ஸிற்கு ஒதுக்குங்கள்.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். முடிந்தால் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு கிளாஸ் அல்லது அதிகபட்சம் ஒரு லிட்டர் வெதுவெதுப்பான நீரை குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி எடை இழப்பு பயணத்தை வேகப்படுத்தும். காலை உணவிற்கு முடிந்தவரை ஓட்ஸ் சாப்பிட முயற்சி செய்யுங்கள். அதை சமைக்கும் போது நிறைய காய்கறியை சேர்த்து செய்வதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். ஓட்ஸ் சாப்பிடப் பிடிக்காதவர்கள் கார்ன் ஃபிளேக்ஸ் அல்லது முட்டைகளின் வெள்ளைக் கருவை காய்கறிகளை சேர்த்து ஆம்லேட் போட்டு சாப்பிடுவது முழு திருப்தியை தரும்.

மதிய உணவிற்கு இடையில் பசித்தால் 10 பாதாம் அல்லது பிடித்தமான நட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். கூடவே கிரீன் டீ, அல்லது ஹெர்பல் டீ எடுத்துக் கொள்வது புத்துணர்ச்சியை தரும். மதிய உணவிற்கு பிரவுன் ரைஸ் ஒரு கப், நிறைய காய்கறிகள் அடங்கிய சாலட், மற்றும் பருப்பு சாம்பார் ஒரு கப் எடுத்துக் கொள்ளலாம். அல்லது அரிசிக்கு பதில் 2 பெரிய அளவிலான எண்ணெய் சேர்க்காத மல்டிகிரெயின் ரொட்டி எடுத்துக் கொள்ளலாம்.

மாலை ஸ்நாக்ஸிற்கு ஒரு கைப்பிடி அளவு வேகவைத்த சுண்டல் அல்லது முளைக்கட்டிய பயிறுடன் கிரீன் டீயுடன் எடுத்துக் கொள்ளலாம். இரவு உணவுக்கு ஒரு கிண்ணம் வெஜ் சூப், ஒரு கிண்ணம் சாலட் அல்லது ஒரு பெரிய கிண்ணத்தில் பப்பாளி அல்லது காய்கறிகள் ஒரு கிண்ணம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் அசைவம் சாப்பிடுபவராக இருந்தால் 3 முட்டையின் வெள்ளை கரு, அல்லது 150 கிராம் சிக்கன் பிரெஸ்டை சுட்டு சாப்பிடலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள டயட் சார்டை ஃபாலோ பண்ணினாலும், சரியான அளவுகளில் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது. முடிந்தால் இந்த டயட்டுடன் 30 நிமிடங்கள் நடைபயிற்சி அல்லது வீட்டிலேயே செய்யக்கூடிய லேசான உடற்பயிற்சியை மேற்கொண்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.

Read More : வீட்டில் இருந்து கொண்டே மாதம் ரூ.20,500 சம்பாதிக்கலாம்..!! எப்படி தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
Advertisement