For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெட்ரோல் போடும்போது இப்படித்தான் ஏமாத்துறாங்க..!! வாகன ஓட்டிகளே உஷார்..!! வைரல் வீடியோ..!!

In the past, various scams of petrol stocks have come to light. In that line, a petrol punk administration involved in a shocking scam is now trapped.
03:00 PM May 23, 2024 IST | Chella
பெட்ரோல் போடும்போது இப்படித்தான் ஏமாத்துறாங்க     வாகன ஓட்டிகளே உஷார்     வைரல் வீடியோ
Advertisement

இந்தியாவில் அதிக மோசடி நடைபெறும் இடங்களில் ஒன்றாக பெட்ரோல் பங்க்குகள் (Petrol Bunks) உள்ளன. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை வாகன ஓட்டிகளை வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மோசடிகளும் ஒரு பக்கம் வாகன ஓட்டிகளை கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாக்குகின்றன.

Advertisement

கடந்த காலங்களில், பெட்ரோல் பங்க்குகளின் பல்வேறு மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அந்த வரிசையில், அதிர்ச்சியில் ஆழ்த்தும் மோசடியில் ஈடுபட்ட பெட்ரோல் பங்க் நிர்வாகம் ஒன்று தற்போது கையும் களவுமாக சிக்கி கொண்டுள்ளது. தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு இந்தியன் ஆயில் (Indian Oil) பெட்ரோல் பங்க்கில் நடைபெற்ற இந்த மோசடி சம்பவம் தான் இது.

இதுதொடர்பான வீடியோவில், பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் ஒரு வாளியில் பெட்ரோல் நிரப்புவதை பார்க்க முடிகிறது. நீங்கள் இந்த வீடியோவை உன்னிப்பாக கவனித்தால், எப்படி மோசடி நடைபெறுகிறது? என்பது புரியும். அதாவது பெட்ரோல் வினியோகம் செய்யும் இயந்திரத்தில் உள்ள மீட்டர் ஓட தொடங்கிய பிறகுதான், பெட்ரோல் வெளியே வருகிறது. இன்னும் தெளிவாக புரியும்படி சொல்வதென்றால், மீட்டரில் 17.56 ரூபாய் என வந்த பிறகுதான், பெட்ரோல் வெளியே வர தொடங்குகிறது. வாடிக்கையாளர் ஒருவர் சந்தேகப்பட்டு சோதனை செய்தபோது இந்த பகீர் மோசடி வெளிச்சத்திற்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலரும், சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் 100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்புபவர்களின் நிலையை எண்ணி பாருங்கள் எனவும் நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Read More : ’எங்க போனாலும் அட்ஜஸ்ட்மெண்ட்’..!! ’எனக்கே வாய்ப்பு இப்படித்தான் கிடைச்சது’..!! நடிகை லாவண்யா பகீர்..!!

Advertisement