மாரடைப்பு Vs கார்டியாக் அரெஸ்ட் | இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? - மருத்துவர் விளக்கம்
இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் பிரச்சனை கவலைக்குரிய ஒன்றாக மாறி வருகிறது. பொதுவாக மாரடைப்பு என்பது வயதானவர்களுக்கு வரக் கூடிய பிரச்சனை என்ற கண்ணோட்டம் நிலவினாலும், 50 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு இப்போதெல்லாம் மாரடைப்பு அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிறு வயதில் மாரடைப்பு என்ற சம்பவத்தால் பல்வேறு தரப்பினர் அச்சமடைந்துள்ளனர். அது குறித்து Sen Balan என்ற பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், மருத்துவ வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது கவனமாகப் பயன்படுத்த வேண்டும். இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பு ஏற்படுவதை ஆங்கிலத்தில் heart attack - myocardial infarction என்றும் தமிழில் மாரடைப்பு என்றும் அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.
அதேநேரம் பிறக்கும் போதே ஏற்படும் குறைபாடுகளால் எப்படி மற்ற உறுப்புகள் பாதிக்கப்படுகின்றதோ, அதேபோல இதயமும் பாதிக்கப்படலாம். அந்த பாதிப்பு அதிகமாக இருந்தால் சில நேரங்களில் சிறுவயதில் உடனடி இறப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. Hypertrophic cardiomyopathy எனப்படும் இதய தசை வீக்க நோய், Long QT syndrome, Wolff-Parkinson-White syndrome போன்ற இதயதுடிப்பு கடத்துதல் நோய்கள், இதய வால்வு பிரச்சனைகள், Arrhythmia எனப்படும் சீரற்ற இதயத்துடிப்பு போன்ற பல நோய்கள் இதற்கு காரணமாக இருக்கலாம்.
இவற்றை மாரடைப்பு என அழைக்கக் கூடாது, இதயச் செயலிழப்பு என அழைப்பதே பொருத்தமாக இருக்கும். இந்தச் செய்தியின் ஆங்கிலத்தில் வந்த பதிப்புகளில் cardiac arrest என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் அதை இதயச் செயலிழப்பு என குறிப்பிடும் போது பொதுமக்களிடம் ஏற்படும் தேவையற்ற பயத்தையும், குழப்பத்தையும் தவிர்க்கலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலமாக விளையாடச் சென்றவர்கள், ஜிம்முக்கு சென்றவர்கள், உள்ளிட்டோர் உயிரிழப்புகளை பலர் மாரடைப்பு என தவறாக குறிப்பிடுவதால் பெற்றோர் , பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
இதய செயலிழப்பு என்றால் என்ன? உடலுக்கு வேண்டிய இரத்தத்தை இதயத்தால் பம்ப் செய்ய முடியாத நிலையே இதய செயலிழப்பு என்று அழைக்கப்படுகிறது. இது நாள்பட்ட நிலை. இதய செயலிழப்பு நிலையில் இது இதய செயல்பாட்டை உடனடியாக நிறுத்தாது. ஆனால் இதயம் பம்ப் செய்ய போதுமான இரத்தத்தை விட குறைவாக வழங்கும். இதனால் உடல் உறுப்புகளுக்கு போதுமான இரத்த ஓட்டம் கிடைக்காது. நுரையீரல், கால்கள் மற்றும் பாதங்கள் போன்ற பகுதிகளில் திரவம் தேங்கும். அதனால் வீக்கத்தை உணரலாம். இதுவும் கூட இதய பாதிப்பின் அறிகுறிகளில் ஒன்றே.
இதய செயலிழப்பால் ஆண்டுதோறும் ஏராளமானோர் உயிரிழக்கிறார்கள். இதயம் செயலிழப்புக்கு 4 நிலைகள் உண்டு என்றாலும் முதல் நிலையிலேயே இது அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. இதய பாதிப்பின் முதல் கட்ட நிலையை இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் எதிர்கொண்டிருக்கலாம் என்றாலும் இதை அவர்களே அறிந்திருக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதே நேரம் இந்த முதல் நிலையை புறக்கணித்தால் அவை படிப்படியாக அதிகரித்து 4 வது நிலையில் முழுமையாக இதய செயலிழப்பை உண்டு செய்து உயிரை பறித்துவிடலாம். இதய பாதிப்பின் நான்கு நிலைகள் , இதய ஆரோக்கியத்துக்கு செய்ய வேண்டிய பரிசோதனைகள் மற்றும் தவிர்க்கும் முறை என்ன என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.
Read more ; 1 வருடத்திற்கு அன்லிமிடெட் 5G டேட்டா.. அதுவும் இவ்வளவு மலிவான விலையில்.. ஜியோவின் புதிய திட்டம்..