For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மக்களே..‌! காலரா பரவ வாய்ப்பு... இந்த மாத்திரை பயன்படுத்தி தண்ணீர் குடிக்க வேண்டும்...! சுகாதாரத்துறை எச்சரிக்கை...

06:00 AM Dec 25, 2023 IST | 1newsnationuser2
மக்களே  ‌  காலரா பரவ வாய்ப்பு    இந்த மாத்திரை பயன்படுத்தி தண்ணீர் குடிக்க வேண்டும்     சுகாதாரத்துறை எச்சரிக்கை
Advertisement

கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் தற்போது வரை 3,331 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்; கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் தற்போது வரை 3,331 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். முகாம் மூலம் 1.29 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். தென் மாவட்டங்களில்பெய்த கனமழையினைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு, குடிநீர் வழங்கக்கூடிய நீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பில்லாத குடிநீரை பருகுவதால் நீரினால் பரவும் நோய்களாகிய காலரா, வயிற்றுப்போக்கு போன்றவை பரவ வாய்ப்புகள் உள்ளன. இதனால் பொதுமக்கள் நன்கு கொதிக்க வைத்த குடிநீரையே பருக வேண்டும் என ஏற்கெனவே பொது சுகாதாரத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், பொதுமக்கள் குளோரின் மாத்திரையைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் மட்டுமே குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. 500 மில்லி கிராம் எடை கொண்ட ஒரு குளோரின் மாத்திரையில் 25 மில்லி கிராம் செயலூட்டப்பட்ட குளோரின் உள்ளது. ஒரு குளோரின் மாத்திரை, ஒரு குடம் குடிநீர் அல்லது 20 லிட்டர் குடிநீரில் கலந்து பயன்படுத்த வேண்டும். குளோரின் மாத்திரை குடிநீரில் கலந்த பின்பு இரண்டு மணி நேரம் கழித்து அக்குடிநீரை பருக, சமைக்க வேண்டும். குளோரின் மாத்திரையை நேரடியாக பொதுமக்கள் உட்கொள்ளக்கூடாது என கூறினார்.

மேலும் குளோரின் மாத்திரைகளை குழந்தைகள் கையில் கொடுக்கக் கூடாது. பெரியவர்களிடம் மட்டுமே வழங்க வேண்டும். குளோரின் மாத்திரைகள் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் களப்பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக சென்று ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 10 குளோரின் மாத்திரைகள் வீதம் விநியோகிக்கப்படும்.

Tags :
Advertisement