முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அரசு ஊழியர்களே இந்த அறிவிப்பை கவனிச்சீங்களா..? விண்ணப்பிக்கும் முறையில் வந்த அதிரடி மாற்றம்..!! இதை மறந்துறாதீங்க..!!

Government employees and teachers in Tamil Nadu have been ordered to apply for leave through the 'Kalanjiam' app in the coming days.
08:56 AM Sep 06, 2024 IST | Chella
Advertisement

இந்தாண்டில் இதுவரை விடுப்பு எடுத்த நபர்களின் விவரங்களையும் செயலியில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இனி வரும் நாட்களில் விடுப்பு சார்ந்த விவரங்களை ‘களஞ்சியம்’ என்ற செயலி மூலமாக பதிவு செய்து உரிய அலுவலருக்கு அனுப்ப வேண்டுமென கரூவூலக கணக்கு ஆணையரால் கடிதம் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், பணியாளர்கள் செப்.1ஆம் தேதி முதல் எடுக்கும் விடுப்புக்கு இந்த செயலி மூலம் மட்டுமே அனுமதி பெற முடியும்.

இந்த செயலியில் சம்பந்தப்பட்ட பள்ளி, விடுப்புக்கு விண்ணப்பிப்பவர், அதனை பரிசீலனை செய்பவர், ஒப்புதல் வழங்குபவர் என நிர்ணயம் செய்து அதற்காக குழுவை உருவாக்கி விடுப்புகளுக்கான அனுமதியை பெற்றுக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதனுடன், இந்தாண்டில் இதுவரை விடுப்பு எடுத்த நபர்களின் விவரங்களையும் இந்த செயலியில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More : ’பிறப்புறுப்பில் கம்பியை நுழைத்து சித்ரவதை’..!! ’பாலியல் அடிமையாக இருந்தேன்’..!! தமிழ் இயக்குனர் மீது நடிகை பகீர் குற்றச்சாட்டு..!!

Tags :
அரசு அலுவலகங்கள்அரசு ஊழியர்கள்தமிழ்நாடுவிண்ணப்பம்
Advertisement
Next Article