முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மகிழ்ச்சி செய்தி…! அரிசி விலையில் அதிரடி மாற்றம்... ஆனால் ரேஷன் அட்டைக்காரர்களுக்கு மட்டும்...

05:27 AM Apr 08, 2024 IST | Vignesh
Advertisement

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் 15 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஆனால் நிகழாண்டு குறுவை பருவத்தின்போது போதிய தண்ணீர் இல்லாததால் அக்டோபர் மாதமே மேட்டூர் அணை மூடப்பட்டது. இதனால் விவசாயிகள் ஒற்றுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே அரிசியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. அத்தியாவசிய உணவு பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.

Advertisement

அந்தவகையில், சென்னையில் 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 அதிகரித்துள்ளது. இதற்கான காரணங்களாக பருவமழை தவறியது, குறைவான விளைச்சல் என்று கூறப்படுகிறது. மேலும் இதனால் நெல் விலையும் அதிகமாகிவிட்டது. எனவே,அடுத்த 3 மாத காலத்துக்கு அரிசி விலை உயர்ந்தே காணப்படும் என்று வியாபாரிகள் கடந்த ஜனவரி மாதமே கணித்து கூறியிருந்தனர்.

சென்னையில் மொத்த விலையில் கிலோ ரூ.60-க்கு விற்ற புழுங்கல் அரிசி, கிலோ ரூ.68 ஆக உயர்ந்துள்ளது. ரூ.60-க்கு விற்ற வேகவைத்த அரிசி ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. பாஸ்மதி அரிசி கிலோ ரூ.120-க்கும், பழுப்பு அரிசி ரூ.39-க்கும் விற்பனையாகிறது. ரூ.37-க்கு விற்ற இட்லி அரிசி ரூ.40 ஆகவும், பிராண்டட் அரிசி கிலோவுக்கு ரூ.10 வரையும் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சென்னையில் சில்லறை விற்பனையில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ. 17 வரை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு இதுவரை இல்லை. வழக்கம் போல ரேஷன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது, போதிய அளவில் அரிசி இருப்பு உள்ளதாகவும், அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். தற்போதுவரை ரேஷனில் அரிசிக்கு தட்டுப்பாடும் இல்லாமல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement
Next Article