மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை!. ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தை மீறியதால் நடவடிக்கை!.
Bajrang Punia: ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, தேசிய அணிக்கான தேர்வு சோதனையின் போது சிறுநீர் மாதிரியை வழங்க மறுத்ததற்காக, தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையால் (NADA) 4 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானாவை சேர்ந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, கடந்த 2020ல், ஜப்பானின் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து, இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரும், பா.ஜ., முன்னாள் எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, கடந்த ஆண்டு பாலியல் புகார் எழுந்த போது, மல்யுத்த வீரர்களை அணி திரட்டி போராடினார்.
இந்தநிலையில், கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி ஹரியானாவின் சோனேபட்டில் நடந்த தேசிய அணிக்கான தேர்வு சோதனையின் போது சிறுநீர் மாதிரியை வழங்க மறுத்ததற்காக, தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையால் (NADA) நான்கு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதாவது, NADA இன் ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளின் பிரிவு 10.3.1 ஐ மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
NADA ஆரம்பத்தில் ஏப்ரல் 23, 2024 அன்று தற்காலிக இடைநீக்கத்தை விதித்தது . இதைத் தொடர்ந்து, உலக மல்யுத்த நிர்வாகக் குழுவும் (UWW) பஜ்ரங்கை இடைநீக்கம் செய்தது. இதனால், கடந்த ஏப்ரல் மாதம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை அவரை சஸ்பெண்ட் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங் புனியா மேல்முறையீடு செய்தார். இதையடுத்து, முறையாக நோட்டீஸ் தந்து சஸ்பெண்ட் செய்ய வில்லை என பஜ்ரங் புனியாவின் இடைநீக்கத்தை ஊக்கமருந்து எதிர்ப்பு ஒழுங்குமுறை குழு ரத்து செய்தது. இந்த நிலையில், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவிற்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை நோட்டீஸ் அனுப்பியது.
அதில், தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகள், 2021 இன் பிரிவு 2.3 ஐ மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. பஜ்ரங், தனது மறுப்பு வேண்டுமென்றே அல்ல, ஆனால் நாடாவின் செயல்முறைகளில் நம்பிக்கையின்மையால் மாதிரிகளை தர மறுப்பு தெரிவித்ததாக வாதிட்டார். காலாவதியான சோதனைக் கருவிகள் வழங்கப்பட்ட நிகழ்வுகளை அவர் மேற்கோள் காட்டி குற்றம்சாட்டினார்.
மேலும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கிற்கு எதிரான போராட்டங்களில் அவர் ஈடுபட்டதால் நிலைமை மோசமடைந்ததாக பஜ்ரங் கூறினார். NADA, தடகள வீரரின் செயல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்றும் "ஊக்கமருந்து சோதனைக்கு சிறுநீர் மாதிரியை வழங்க தடகள வீரர் வேண்டுமென்றே மறுப்பு தெரிவித்தார் என்றும் கூறியுள்ளது.
Readmore: சம்பல் வன்முறை!. போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்கள்!. வெளியான சிசிடிவி காட்சிகள்!.