ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதில் அதிரடி மாற்றம்..!! அரசு எடுக்கப்போகும் முக்கிய முடிவு..!!
05:57 PM Dec 21, 2023 IST
|
1newsnationuser6
Advertisement
தமிழ்நாடு ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் பயோமெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த முறையானது அடிக்கடி செயலிழந்து விடுவதாகவும், பொருட்கள் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்து வந்தது. இதனால் ரேஷன் கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
Advertisement
இந்நிலையில் ரேஷன் கடைகளில் கருவிழி சார்பாக ரசீது வழங்கும் பிரிண்டர் சாதனங்கள் வைக்கும் பணிகளை அடுத்த சில நாட்களில் தொடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்வதற்கு பாயிண்ட் ஆப் சேல் (POS) எனப்படும் விற்பனை முனைய கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Article