பிஎஃப்-இல் ஏதேனும் சந்தேகமா..? கவலை வேண்டாம்..!! வரும் 28ஆம் தேதி சிறப்பு முகாம்..!! எங்கெங்கு தெரியுமா..?
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 10 இடங்களில் வருங்கால வைப்பு நிதி சிறப்பு முகாம் வரும் நவம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வருங்கால வைப்பு நிதி ஆணையர் ஆண்ட்ரூ பிரபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சார்பில் 'வைப்பு நிதி உங்கள் அருகில்' எனும் சிறப்பு முகாம் 28ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறவுள்ளது.
சென்னையில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய அலுவலக வளாகத்தில் முகாம் நடைபெறவுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கும்மிடிப்பூண்டி சின்ன ஓபுலாபுரம் ஜி.என்.டி. சாலையில் உள்ள ஷரோன் பிளை எனும் நிறுவன வளாகத்தில் நடைபெறவுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மறைமலைநகர் யூகால் பியூல் சிஸ்டெம்ஸ் லிமிடெட் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு டி.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. வேலூருக்கு காட்பாடி குடியாத்தம் சாலையில் உள்ள குளுனி கான்வென்டில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. திருவண்ணாமலைக்கு வந்தவாசி அகஸ்தியா மெட்ரிக் பள்ளியில் நடைபெற உள்ளது. ராணிப்பேட்டைக்கு கலவாய் ஜி.பி.நகர் ஆதிபராசக்தி என்ஜினீயரிங் கல்லூரியிலும், திருப்பத்தூருக்கு ஆம்பூர் பிளெஸ்ஸோ மெட்ரிக் பள்ளியிலும் வருங்கால வைப்பு நிதி முகாம் நடைபெறவுள்ளது.
புதுச்சேரிக்கு பக்கமுடியான்பேட்டை இன்டெக்ரா சாப்ட்வேர் நிறுவனத்திலும், காரைக்கால் மாவட்டத்துக்கு காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள இ.எஸ்.ஐ. கார்ப்பரேசன் கிளை அலுவலகத்திலும் 'வைப்பு நிதி உங்கள் அருகில்' சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் முகாமில் பங்கேற்று தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சுரேந்தர்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் குறைதீர்ப்பு முகாம் 28ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், பாரதி பார்க் சாலை, வனக்கல்லூரி வளாகம் அருகில், சாய்பாபா காலனி, கோவை.
திருப்பூரில் சி.ஆர். கார்மெண்ட்ஸ், ஸ்ரீகோகுல கிருஷ்ணா நகர், டி.கே.டி. மில்ஸ் பல்லடம் சாலை, திருப்பூர். நீலகிரியில் ஜே.எஸ்.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரோஸ் கார்டன் அருகில் ஊட்டி. மேற்கண்ட இடங்களில் நடைபெறவுள்ள இம்முகாமில் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி சமர்ப்பிக்கலாம். மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் தீர்வு காணப்படும்" என தெரிவித்துள்ளார்.