ரூ.6000 பெறுவதில் சந்தேகமா?… இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!… கட்டுப்பாட்டு அறை அமைப்பு!
புயல் பாதித்த மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் பெறுவது குறித்த சந்தேகங்களை தீர்க்க சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த 4 மாவட்டங்களில் ரூ.6 ஆயிரம் வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். இதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும். இந்தநிலையில், புயல் பாதித்த மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் பெறுவது குறித்த சந்தேகங்களை தீர்க்க சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
நிவாரணம் குறித்த சந்தேகங்களை மக்கள் 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் கேட்டறியலாம் எனவும் 044-2859 2828 என்ற தொலைபேசி எண்ணிலும் சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம் எனவும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.