For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

MK Stalin : எந்த பதற்றமும் வேண்டாம்...! 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை...!

05:30 AM Mar 01, 2024 IST | 1newsnationuser2
mk stalin   எந்த பதற்றமும் வேண்டாம்     12 ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
Advertisement

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை இன்று எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்த ஆண்டுக்கான 12-ம் பொதுத் தேர்வு இன்று முதல் மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கு இன்று தேர்வு நடைபெறும். இந்த தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 47 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

முறைகேடுகளை தடுக்க 4,200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர்,வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை இன்று எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான 12-ம் வகுப்பு மாணவர்கள் இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன். தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம். பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் ‌.

English Summary: Don't worry… CM Stalin's advice to Class 12 students

Advertisement