முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிசைந்து வைத்த கோதுமை மாவு!... பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தாதீர்கள்!… விளைவுகள் ரொம்ப அதிகம்!

05:54 AM Nov 21, 2023 IST | 1newsnationuser3
Advertisement

ரொட்டி செய்த பிறகும், பிசைந்த மாவு எஞ்சியிருக்கும். அந்த மாவை மக்கள் அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து மறுநாள் பயன்படுத்துவார்கள். சில நேரம் திட்டமிட்டே, நேரத்தை மிச்சப்படுத்த, மாவை மொத்தமாக பிசைந்து 2 அல்லது 3 நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பவர்களும் உள்ளனர். அதனால் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். ஆனால் உங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி இருக்குமா என நீங்கள் ஆச்சர்யப்படலாம். ஆனால் இது முற்றிலும் உண்மை. பழைய மாவில் செய்யப்படும் ரொட்டிகள் உங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

Advertisement

மாவை பிசைந்து குளிர்சாதன பெட்டியில் சேமிப்பதன் மூலம், குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியாகும் வாயு மாவுக்குள் நுழைந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால், இந்த மாவில் செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிட்டால் நோய் வாய்ப்படும். மாவை பிசைந்த பிறகு, நொதித்தல் செயல்முறை அதில் தொடங்குகிறது, இதன் காரணமாக பாக்டீரியா வளரத் தொடங்குகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஃப்ரிட்ஜில் வைத்து ரொட்டி செய்யும் போது வயிற்றில் கோளாறு ஏற்படும்.

பழைய மாவில் ரொட்டி செய்து சாப்பிடுவதால் வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் வாயு போன்ற வயிற்று பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் தினமும் பழைய மாவைப் பயன்படுத்தினால், இதனால் உங்கள் செரிமானம் அமைப்பு பாதிக்கப்படுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமடையத் தொடங்குகிறது.

Tags :
wheat flourபிசைந்து வைத்த கோதுமை மாவுபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தாதீர்கள்விளைவுகள் ரொம்ப அதிகம்
Advertisement
Next Article